பாடகி சின்மயி வீட்டுக்கு வந்த இரட்டை புதுவரவு: ரசிகர்கள் வாழ்த்து

  • IndiaGlitz, [Wednesday,June 22 2022]

தமிழ் உள்பட இந்தியாவின் பல மொழிகளில் பாடல்களைப் பாடிய பிரபல பாடகி சின்மயி வீட்டுக்கு இரட்டை புதுமுகங்கள் வந்துள்ளதை அடுத்து ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

பிரபல பாடகி சின்மயி கடந்த 2014ஆம் ஆண்டு மே 5ஆம் தேதி ராகுல் ரவீந்திரன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு எட்டு ஆண்டுகள் கழித்து தற்போது இரட்டை குழந்தை உள்ளது. இது குறித்து சின்மயி தனது சமூக வலைதளத்தில் மகிழ்ச்சியுடன் கூறியுள்ளதை அடுத்து அந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

சின்மயி கர்ப்பமானது குறித்து எந்தவித தகவல்களையும் சமூக வலைதளங்களில் தெரிவிக்காமல் இருந்து தற்போது இரட்டை குழந்தைகள் பிறந்தவுடன் குழந்தை பிறந்தது குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். தனது குழந்தைகளின் பிஞ்சு விரல்களை பிடித்து இருக்கும் புகைப்படத்தை டுவிட்டரில் பகிர்ந்த சின்மயி, ‘த்ரிப்தா மற்றும் ஷ்ரவாஸ் ஆகிய எங்களது குழந்தைகள் என்றைக்கும் ஆன பிரபஞ்சத்தின் மையம் என்றும், இனி இவர்கள் தான் எல்லாமும்’ என்று பதிவு செய்துள்ளார்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை தனது சமூக வலைத்தளத்தில் தனக்கு குழந்தை இல்லாதது குறித்தும், தான் பெண்ணாக இன்னும் முழுமையடையவில்லை என்று வருத்தத்துடன் கூறி வந்த சின்மயிக்கு தற்போது இரட்டை குழந்தை பிறந்ததை அடுத்து அவரது குடும்பத்தினர் மிகுந்த மகிழ்ச்சியுடன் உள்ளனர்.

More News

பெயரை மாற்றி தமிழ் கலாச்சாரத்தில் இணைந்த நடிகை: குவியும் பாராட்டுக்கள்!

தமிழ் திரைப்பட நடிகை ஒருவர் தனது பெயரை மாற்றி தமிழ் கலாச்சாரத்தில் இணைந்து உள்ளதை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. 

மகன்களுடன் தனுஷ் ஜாலியாக என்ன செய்கிறார் தெரியுமா? வைரல் புகைப்படம்

தமிழ் திரை உலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான தனுஷ் நடிப்பில் உருவான 'தி க்ரே மேன்', 'திருச்சிற்றம்பலம்' 'வாத்தி' , 'நானே வருவேன்' ஆகிய திரைப்படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகின்றன

விஜய் ரசிகர்களுக்கு இன்று டபுள் விருந்து: 'வாரிசு' படக்குழு அறிவிப்பு!

தளபதி விஜய் நடித்து வரும் 'வாரிசு' திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியானது என்பதும் இந்த போஸ்டர் நேற்று இணையதளங்களில் மிகப்பெரிய அளவில் வைரல் ஆனது என்பதும் தெரிந்ததே. 

பழையபடி கேப்டனாக கர்ஜிக்க வேண்டும்: ரஜினிகாந்த் பிரார்த்தனை

 கேப்டன் விஜயகாந்த் பழைய கேப்டனாக மீண்டும் கர்ஜிக்க வேண்டும் என சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ரஜினிக்கும் சத்யராஜூக்கும் என்ன பிரச்சனை: உண்மையை உடைத்த சிபிராஜ்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துக்கும் சத்யராஜூக்கும் இடையே பிரச்சனை இருப்பதாக கோலிவுட் திரையுலகில் அடிக்கடி வதந்திகள் பரவி வரும் நிலையில் இதுகுறித்து நடிகர் சிபிராஜ் விளக்கம் அளித்துள்ளார்.