சுசித்ரா விவகாரம். பிரபல பாடகி சின்மயி தன்னிலை விளக்கம்

  • IndiaGlitz, [Saturday,March 04 2017]

பிரபல பாடகி சுசித்ராவின் சமூக வலைத்தள பக்கம் கடந்த சில நாட்களாக ஹேக்கர்களால் ஹேக் செய்யப்பட்டு அதில் பிரபலங்களின் அந்தரங்க புகைப்படங்கள் வெளிவந்து சர்ச்சைக்குள்ளாகி வருவதால் கோலிவுட் திரையுலகில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று மேலும் இரண்டு நடிகைகளின் அந்தரங்க புகைப்படங்களும் வெளியாகியுள்ளது. அதுமட்டுமின்றி பிரபல இசையமைப்பாளர் ஒருவருடன் பாடகி சின்மயி இருந்த புகைப்படங்கள் விரைவில் வெளிவரவுள்ளதாகவும் அதில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது ஹேக்கர்களின் கைவரிசை என்று கூறப்பட்டு வரும் நிலையில் பாடகி சின்மயி தனது சமூக வலைத்தளத்தில் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார். பாடகி சுசித்ரா சில தினங்களாக மன அழுத்தத்தில் இருப்பதாகவும், நல்ல உடல்நிலையில் அவர் இல்லாததை அவருடைய கணவர் கார்த்திக் குமார் ஃபேஸ்புக்கில் வெளியிட்ட வீடியோவில் இருந்து தெரியவருவதாகவும் சின்மயி கூறியுள்ளார்

சுசித்ராவின் பக்கத்தில் இடம்பெற்றுள்ள பதிவுகளால் தானும் தன்னுடைய குடும்பத்தினர்களும் மனதளவில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இருப்பினும் தான் எந்த தவறும் செய்யவில்லை என்பதால் யாருக்கும் அச்சப்பட வேண்டிய அவசியமும் இல்லை என்றும் சின்மயி தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த அளவுக்கு தான் நல்ல நிலையில் இருப்பதற்கு தனது திறமை மட்டுமே காரணம் என்றும் தனக்கு உண்மையாக ஆதரவு கொடுத்து வரும் அனைவருக்கும் நன்றி என்றும் சின்மயி தெரிவித்துள்ளார்.

More News

என்னை தயவுசெய்து விட்டுவிடுங்கள். ஹேக்கர்களிடம் சுசித்ரா வேண்டுகோள்

பிரபல பாடகி சுசித்ராவின் சமூக வலைத்தளத்தில் பிரபலங்களின் புகைப்படங்கள் மற்றும் சர்ச்சைக்குரிய கருத்துக்கள் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஜெயலலிதாவின் எந்தெந்த சொத்துக்கள் பறிமுதல் ஆகும். நீதிமன்ற அதிகாரி விளக்கம்

சொத்துக்குவிப்பு வழக்கில் சமீபத்தில் தீர்ப்பு அளித்த சுப்ரீம் கோர்ட், சசிகலா, இளவரசி, மற்றும் சுதாகரன் ஆகியோர்களுக்கு 4 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், தலா ரூ.10 கோடி அபராதமும் விதித்தது. அதேபோல் இந்த வழக்கின் A1 குற்றவாளியான ஜெயலலிதா மரணம் அடைந்துவிட்டதால் அவர் இந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்படுகிறார். இருப்பினும் சிறப்பு நீதி

நடிகர் சத்யராஜூக்கு வேல்ஸ் பல்கலை அளித்த கெளரவம்

சென்னை அருகேயுள்ள வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராக இருக்கும் ஐசரி கணேஷ், நடிகர்களுக்கு பல்வேறு உதவிகள் செய்து வருகிறார் என்பது தெரிந்ததே. இந்நிலையில் தற்போது பிரபல நடிகர் சத்யராஜ் அவர்களுக்கு இந்த பல்கலைக்கழகம் கெளரவ டாக்டர் பட்டம் கொடுத்து கெளரவித்துள்ளது...

ஐ.நா சபையில் பரதநாட்டிய நடனம் ஆடும் ரஜினி வீட்டு விஐபி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் மகளும், தனுஷின் மனைவியுமான ஐஸ்வர்யா தனுஷ் பல்திறமை கொண்டவர் என்பது பலமுறை நிரூபணம் ஆகியுள்ளது.

'தல' தோனி இன்றும் மக்கள் கேப்டன் தான். ஒரு நெகிழ வைக்கும் சம்பவம்

திரையுலகில் உள்ள தல நடிகராக மட்டுமின்றி நல்ல மனிதநேயமிக்கவராக இருப்பது போலவே கிரிக்கெட் தல என்று அழைக்கப்படும் தோனி, சிறந்த கேப்டனாக இருந்து அனைவரின் மனதையும் வென்றது மட்டுமின்றி சிறந்த மனிதர், நட்புக்கு முக்கியத்துவம் கொடுப்பவர் என்பது சமீபத்திய நெகிழ வைக்கும் சம்பவங்களால் தெரியவந்துள்ளது.