கமல்ஹாசன் மூன்றாம் தர நடிகரா? தமிழக அமைச்சர்களுக்கு சின்மயி சரமாரி கேள்விகள்

  • IndiaGlitz, [Wednesday,July 19 2017]

சும்மா இருக்கற சிங்கத்தை சீண்டி பாத்தா இதுதான் கதி என்ற கதையாகிவிட்டது கமல்ஹாசனின் விஷயம். அவர் பாட்டுக்கு சினிமாவே தனது வாழ்க்கை என்று போய்க்கொண்டிருந்த நிலையில் தேவையில்லாமல் தமிழக அரசியல்வாதிகள் அவரை சீண்டிவிட்டுவிட்டனர். இதனால் அவர்கள் அனுபவிக்க இருக்கின்ற பலன் இன்னும் சில நாட்களில் தெரிந்துவிடும்
இந்த நிலையில் கமல்ஹாசனை ஒருமையில் பேசியதற்கும், கடுமையாக விமர்சனம் செய்ததற்கும், மூன்றாம் தர நடிகர் என்று கூறியதற்கும் எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன. இன்று பிரபல பாடகி சின்மயி இதுகுறித்து அறிக்கை ஒன்றை விடுத்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
நடிகர் கமல்ஹாசனை அமைச்சர் சி.வி.சண்முகம் விமர்சித்து கருத்து கூறி இருக்கிறார். கமல்ஹாசன் ஒரு மூன்றாம் தர நடிகர் என்றும், பணத்துக்காக அவர் எதையும் செய்வார் என்றும், கையில் படங்கள் இல்லாமல் இருக்கிறார் என்றும் குறை கூறியுள்ளார். கமல்ஹாசன் நடத்தி வரும் டெலிவி‌ஷன் நிகழ்ச்சி பெரிய வரவேற்பை பெற்று இருக்கிறது. அந்த நிகழ்ச்சி பார்வையாளர்கள் வி‌ஷயத்தில் வரலாறு படைத்து இருக்கிறது.
அது ஒரு பொழுதுபோக்கு நிகழ்ச்சி. அதுவா கலாசார சீரழிவு? 40 வருடங்களுக்கு முன்பு கிராம பகுதிகளில் கோவில் விழாக்களில் கிராமிய கலைநிகழ்ச்சிகளும், தெருக்கூத்துகளும் மட்டுமே நடந்தன. ஆனால் இப்போது கோவில் விழாக்களுக்கு சென்று பாருங்கள். அங்கு ரிக்கார்டு டான்சுகளும், வீடியோ படங்களையும் தான் பார்க்க முடியும். அது ரொம்ப கலாசார முன்னேற்றமா? அதுவும் கோவில்களில்..
கலாசார பாதுகாப்பு என்று பேசுவதாக இருந்தால் கடற்கரையை சுத்தப்படுத்துங்கள். அங்கு சாமானியர்கள் குடும்பத்துடனும், குழந்தைகளுடனும் சென்று நேரத்தை செலவிட முடியாத அளவுக்கு கண்கூசும் காட்சிகளை பார்க்க வேண்டி இருக்கிறது. கமல்ஹாசன் மிக சிறந்த நடிகர். உலகம் முழுவதும் ரசிகர்களை பெற்று இருக்கிறார். அவரை நீங்கள் மூன்றாம் தர நடிகர் என்று ஒருமையில் கூறுகிறீர்கள். உங்கள் அமைச்சர் பதவியின் கண்ணியம் ஒப்பிட முடியாதது. பிரபலமாக இருப்பவரை பற்றி இப்படி பேசி இருப்பது அறுவெறுக்கத்தக்கது. சந்தர்ப்பவசமானது.
ரஜினிகாந்தும் அமைப்புகள் ஊழல்மயமாகிவிட்டது என்று கூறி இருக்கிறார். அவருக்கு ரசிகர் பலம் உள்ளது. மத்திய அரசும் அவர் மீது நம்பிக்கை வைத்து இருக்கிறது. அதனால் அவரை பற்றி பேசவில்லை. கலைஞர்களும் இந்த நாட்டின் பிரஜைகள்தான். கருத்து கூறும் உரிமை அவர்களுக்கு இருக்கிறது. கடந்த சில மாதங்களாக மக்கள் தண்ணீர் இல்லாமல் கஷ்டப்படுகிறார்கள். ஒரு அமைச்சராக அதற்கு என்ன நடவடிக்கை எடுத்தீர்கள். முதல்–அமைச்சரிடமாவது விவாதித்தது உண்டா? சட்டவிரோதமாக மணல் எடுப்பவர்கள் பற்றி கேள்வி கேட்டது உண்டா? சாதியை சொல்லியும் கமல்ஹாசனை அவமதித்து இருக்கிறீர்கள். அது அவருக்கு பொருந்தாது. கமல்ஹாசன் பெரியார் கொள்கைகளை பின்பற்றி வாழ்கிறார். ஒரு ஆளும் கட்சியில் அமைச்சராக இருந்து கொண்டு இதுபோன்று பேசுவது ஜனநாயகத்துக்கு விரோதமானது
இவ்வாறு சின்மயி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

More News

கமல் மக்களுக்கு என்ன செய்தார்? அரசியலுக்கு வர நினைப்பது ஏன்? தமிழிசை கேள்வி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரப்போவதாக சூசகமாக அறிவித்தபோது அரசியல்வாதிகளில் பலர் எதிர்ப்பு தெரிவித்தனர். தற்போது கமல்ஹாசனின் அரசியல் வருகையையும் அவர்கள் எதிர்க்க தயாராகிவிட்டனர்...

கமல்ஹாசனுக்கு ஆதரவளித்த தந்தையும், மகனும்!

உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள் சமீபகாலமாக தமிழக அரசு குறித்து வெளியிட்ட தைரியமான விமர்சனங்களால் ஆத்திரம் அடைந்த ஆட்சியாளர்கள் அவரை மிரட்டும் தொனியில் நடந்து வருகின்றனர்

கமலின் தமிழ் கவிதையை மொழி பெயர்த்த கஸ்தூரி

உலக நாயகன் கமல்ஹாசன் தமிழின் மீது அளவில்லா காதல் கொண்டவர் என்பதும் அவருடைய பேச்சும், எழுத்தும் சுத்த தமிழில் இருக்கும் என்பதும் அனைவரும் அறிந்ததே.

ஐஸ்வர்யா ராஜேஷின் 'ஹவுஸ் ஓனராக' மாறிய பெண் இயக்குனர்

கோலிவுட் திரையுலகில் பெண் இயக்குனர்கள் அரிதாகவே இருக்கும் நிலையில் குணசித்திர நடிகையாகவும் இயக்குனராகவும் தன்னை அடையாளப்படுத்தி கொண்டவர் லட்சுமி ராமகிருஷ்ணன்...

அஜித்தின் அடுத்த படத்தை செளந்தர்யா ரஜினிகாந்த் இயக்குவாரா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் இளையமகளும், 'கோச்சடையா', 'விஐபி 2' படங்களின் இயக்குனருமான செளந்தர்யா ரஜினிகாந்த் தற்போது 'விஐபி 2' படத்தின் புரமோஷன்களில் பிசியாக உள்ளார்...