நான் ஓடி ஒளிய மாட்டேன்.. தைரியம் இருந்தால் நேரில் வந்து கேள்வி கேளுங்கள்: பாடகி கெனிஷா


Send us your feedback to audioarticles@vaarta.com


நடிகர் ரவி மோகன் மற்றும் அவரது மனைவி ஆர்த்தி பிரிவு குறித்த செய்திகள் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருக்கின்றன என்பதை பார்த்து வருகிறோம். குறிப்பாக ரவி மோகன், ஆர்த்தி, சுஜாதா விஜயகுமார் உள்ளிட்டோர் மாறி மாறி அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் பாடகி கெனிஷா மீதும் கடும் விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கும் நிலையில் அவர் தன் மீதான விமர்சனத்திற்கு விளக்கம் அளித்து தனது இன்ஸ்டாகிராமில் பல பதிவுகள் செய்துள்ளார். அதில் ஒரு பதிவில் அவர் தான் நல்ல குடும்பத்து பெண் என்றும் என்னால் யாரும் பிரியவில்லை என்றும் இந்த பிரச்சனைகளை நான் கடவுளிடமே விட்டுவிடுகிறேன், அவர் பார்த்துக் கொள்வார் என்றும் பதிவு செய்துள்ளார், அவர் தனது பதிவில் மேலும் கூறியதாவது:
என் பதிவில் உள்ள கமெண்ட்ஸ்களை முடக்க மாட்டேன், ஓடி ஒளியவும் மாட்டேன். எனக்கு யாரிடமும் மறைக்க வேண்டிய எதுவும் இல்லை. என் செயல்களை கேள்வி கேட்பதற்கு உங்களுக்கு உரிமை உள்ளது. ஆனால் நேரில் வந்து கேளுங்கள். நான் மக்கள் முன் என் பார்வையில் உண்மை என்ன என்பதை விளக்க தயார். ஒருவருடைய பொய்யான கூற்றுகள் கள் உங்களுக்கு உண்மையாக தோன்றுகிறதா? என்னை நீதிமன்றத்திற்கு அழையுங்கள். நான் இதில் காரணம் என உறுதியாக நினைத்தால் சட்டப்படி எதையும் செய்ய தயார். தயவுசெய்து - நீதிமன்றத்தில் சந்திக்க வாருங்கள்!
ஊடகங்களின் மூலம் வெறுப்பை பரப்புவதே உங்கள் நோக்கமா? அப்படியானால் தயவுசெய்து அதை நிறுத்துங்கள் . நான் ஒரு நல்ல குடும்பத்தில் பிறந்த பெண். இவ்வளவு விஷயங்கள் நடக்கின்றனவென்றால், என் உண்மை என்னவென்று ஏன் பார்ப்பதில்லை?
உங்கள் சாபங்கள், உடல் அவமதிப்பு, தாக்குதல், பெண்களை இழிவாக பார்ப்பது, பொய் தகவல்களை பரப்புவது, மரண மிரட்டல்கள் இவற்றால் என்னென்ன துன்பங்களை அனுபவிக்கிறேன் என்பதை யாராவது சிந்தித்தீர்களா?
என்னை காயம் செய்ய கர்மா பற்றி பேசுகிறீர்கள் . உண்மையான மற்றும் சட்டப்படி உண்மை வெளிவரும் போது உங்களுக்கு என்ன நடக்கப்போகிறது என்பதைக் கூட நான் பார்க்க விரும்பவில்லை.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout

-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com