11வது முறையாக கர்ப்பமான பிரபல பாடகி: ரசிகர்கள் அதிர்ச்சி!

  • IndiaGlitz, [Friday,February 25 2022]

பிரபல பாடகி ஒருவர் தான் 11வது முறையாக கர்ப்பமாக உள்ளதாக தனது சமூக வலைத்தளத்தில் கூறியுள்ள நிலையில் இந்த தகவலை கேட்டு ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

பிரபல அமெரிக்க பாடகி கேகே வியாட் என்பவர் 11வது முறையாக கர்ப்பம் அடைந்ததாக சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கூறியதோடு தனது சமூக வலைத்தளத்தில் இது குறித்த வீடியோவை வெளியிட்டுள்ளார்

பாடகி, பாடலாசிரியர், நடிகையான கேகே வியாட் தனது 18வயதில் ரஹ்மத் மோர்டன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு மூன்று குழந்தைகள் இருந்த நிலையில் 2009ஆம் ஆண்டு கணவரை விவாகரத்து செய்தார்
அதன்பிறகு 2010ஆம் ஆண்டு மைக்கேல் ஜாமர் என்பவரை திருமணம் செய்துகொண்டார். அவருடன் 7 வருடங்கள் வாழ்ந்த பாடகி கே.கே. வியாட்டுக்கு 6 குழந்தைகள் பிறந்தன என்பதும் இதனையடுத்து அவருக்கு மொத்தம் ஒன்பது குழந்தைகள் இருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் 2018 ஆம் ஆண்டு இரண்டாவது கணவரையும் விவாகரத்து செய்துவிட்டு முன்னாள் காதலர் ஜக்காரியா என்பவரை மூன்றாவதாக திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு 2010ஆம் ஆண்டு ஒரு குழந்தை பிறந்த நிலையில் தற்போது தான் மீண்டும் கர்ப்பமாகி உள்ளதாகவும் 11வது குழந்தையை வரவேற்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்

பாடகியின் இந்த அறிவிப்பை கேட்டு அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள் தங்கள் பாணியில் காமெடியான கமெண்ட்ஸ்களை பதிவு செய்து வருகின்றனர்.

More News

'வலிமை' படத்தின் முதல் நாள் வசூல் இத்தனை கோடியா? ஆச்சரியத்தில் கோலிவுட்!

அஜித் நடித்த 'வலிமை' திரைப்படம் நேற்று வெளியான நிலையில் ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் இந்த படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வெளியாகி கொண்டிருக்கின்றன.

'ஆர்.ஆர்.ஆர்' ஹீரோவுடன் ஜான்வி கபூர் நடிப்பது உண்மையா? போனிகபூர் விளக்கம்

பிரமாண்ட இயக்குநர் எஸ்எஸ் ராஜமவுலி இயக்கத்தில் உருவான 'ஆர்.ஆர்.ஆர்' திரைப்படத்தின் ஹீரோக்களில் ஒருவரான ஜூனியர் என்டிஆர் ஜோடியாக ஜான்வி கபூர் நடிக்க உள்ளதாக கூறப்படும்

சூப்பர் ஹீரோ தோனியின் கிராபிக்ஸ் நாவலை வெளியிட்ட சூப்பர் ஸ்டார்… வைரல் புகைப்படம்!

இந்தியக் கிரிக்கெட்டின் அணியின் முன்னாள் கேப்டன் தல தோனி அவெஞ்சர்ஸ்

என்னவொரு புத்திசாலித்தனம்? 4 ஆவது மாடியில் தொங்கியபடி க்ளீனிங்… பதற வைக்கும் வீடியோ!

உத்திரபிரதேச மாநிலம் காசியாபத் நகரில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்துவரும் பெண் ஒருவர் ஜன்னலை

ஒரே இரவில் கோடீஸ்வரரான செங்கல் வியாபாரி… தேடிவந்த அதிர்ஷ்டம்!

மத்தியப் பிரதேச மாநிலத்தில் குறைந்த அளவில் செங்கல் வியாபாரம் செய்துவந்த வியாபாரி ஒருவருக்கு நிலத்தைத் தோண்டும்போது