பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் உடல்நிலை குறித்து அதிர்ச்சி தகவல்!

திரைப்பட பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம் அவர்கள் சமீபத்தில் கொரனோ தோற்றால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சையின் போது அவர் வெளியிட்ட ஒரு வீடியோவில் தான் நலமாக இருப்பதாகவும், தனது உடல்நிலை குறித்து யாரும் கவலைப்பட வேண்டாம் என்றும் தெரிவித்திருந்தார் 

இந்த நிலையில் சற்று முன் எஸ்பி பாலசுப்ரமணியம் சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் ’கொரோனா தொற்றால் சிகிச்சை பெற்று வரும் பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக அறிவித்துள்ளது. அவர் தற்போது நார்மல் வார்டில் இருந்து தீவிர சிகிச்சை பிரிவிற்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருகிறது என்றும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது

எஸ் பி பாலசுப்பிரமணியம் அவர்கள் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக வெளிவந்துள்ள செய்தி அவரது ரசிகர்களையும் கோலிவுட் திரையுலகினர்களையும் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது 

More News

தயவுசெய்து இப்படி செய்யாதீர்கள்: கையெடுத்து கும்பிட்டு கேட்டு கொண்ட யோகிபாபு!

பிரபல காமெடி நடிகர் யோகிபாபு தற்போது முன்னணி காமெடி நடிகராக இருந்தாலும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் அவர் பல படங்களில் ஓரிரு காட்சிகளில் மட்டுமே நடிக்கும் நடிகராக இருந்தார்.

இபாஸ் நடைமுறையில் புதிய தளர்வு: அதிரடி அறிவிப்பு விடுத்த முதல்வர் பழனிசாமி

கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வதற்கு தடை செய்யப்பட்டுள்ளது. அவசர காரியமாக செல்ல வேண்டுமென்றால்

தற்கொலை செய்த ரசிகரின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறிய விஜய்!

இன்று காலை முதல் டுவிட்டரில் பாலா என்ற விஜய் ரசிகர் மன அழுத்தத்தால் தற்கொலை செய்துகொண்ட தகவல் மிக வேகமாக பரவி டுவிட்டரில் டிரெண்ட் ஆனது என்பது தெரிந்ததே.

கொரோனா காலத்திலும் விவசாயிகளின் நலன் காக்கும் தமிழக அரசு!!! அதிரடித் திட்டங்களால் அசத்தும் தமிழக முதல்வர்!!!

இந்திய அளவில் கொரோனாவை சிறப்பாக கையாளும் மாநிலமாகத் தமிழகம் முதலிடம் பெற்றிருக்கிறது.

மலேசியாவின் 3 மாநிலத்திற்கு கொரோனாவை பரப்பிய நபர்… 3 மாதம் சிறை மற்றும் பரபரப்பு சம்பவம்!!!

தமிழகத்தின் சிவகங்கையில் இருந்து மலேசியாவிற்கு சென்ற நபர் அங்குள்ள 3 மாநிலத்திற்கு கொரோனாவை பரப்பியதாக பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது