ஜெயம் ரவி - கெனிஷா என்ன தப்பு பண்ணுனாங்க.. உங்களுக்கு அசிங்கமா இல்லையா? பாடகி சுசித்ரா


Send us your feedback to audioarticles@vaarta.com


நடிகர் ரவி மோகன் மற்றும் பாடகி கெனிஷா விரைவில் திருமணம் செய்ய போவதாக கூறப்படும் நிலையில் இது குறித்து பாடகி சுசித்ரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில் ஜெயம் ரவியும் கெனிஷாவும் என்ன தப்பு பண்ணினார்கள்? சினிமா உலகத்துல யாரும் செய்யாத ஒரு தப்பையா ஜெயம் ரவி பண்ணியிருக்கார்? எல்லோரும் கமுக்கமாக பண்ணுகிறார்கள், இவர் வெளிப்படையாக தன் மனதுக்கு தோன்றியதை செய்கிறார். அந்த பெண்ணுக்கு எவ்வளவு அங்கீகாரம் கொடுக்கிறார்?
எல்லா பெண்களும் கெனிஷாவை பார்த்து பெருமைப்பட வேண்டும், ஏன் அவரை தாழ்த்தி பேசுகிறீர்கள்? இத்தனை வருஷமாக ஒர்க் ஆகாத திருமணத்திற்காக ஒருத்தி அழுது கொண்டிருக்கிறார். யார் அவர்? முன்னாள் மனைவி தானே, அவருக்கு கெனிஷா பற்றி கூறுவதற்கு என்ன தகுதி இருக்கிறது?
கெனிஷா என்ன தப்பு செய்தார்? யாரும் போடாத மியூசிக் வீடியோவை அவர் போட்டாரா? இப்ப மட்டும் அந்த வீடியோ எல்லாம் உங்கள் கண்ணுக்கு உறுத்துகிறதா? ஆண்ட்ரியா மேடையில் போடுகிற டிரஸ்ஸை தான் போடுகிறார், உடனே அவருடைய உடை குறித்து விமர்சனம் செய்கிறீர்களே?
உங்களுக்கு அசிங்கமாக இல்லையா, என்ன ஜெயம் ரவி தன்னுடைய பெயரில் இருந்து ஜெயம் என்பதை எடுக்காமல் இருக்கலாம், அந்த பெயர் உங்களுக்கு ஒரு தனித்துவமானது, அதை நீங்கள் எடுக்காமல் இருக்கலாம்’ என்று பாடகி சுசித்ரா தெரிவித்தார்.
சுசித்ராவின் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout

-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com