close
Choose your channels

பாடகி சுசித்ராவின் அடுத்த வீடியோ: இணையதளங்களில் வைரல்

Monday, June 1, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் பின்னணி பாடகி சுசித்ரா ’சுசுலீக்ஸ்’ என்ற பெயரில் தனது சமூக வலைதளப் பக்கத்தில் ஒருசில சர்ச்சைக்குரிய வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். அந்த வீடியோவில் முன்னணி நடிகர்கள் மற்றும் நடிகைகளின் அந்தரங்கங்கள் வெளியானதால் கோலிவுட் திரையுலகமே பரபரப்பானது.

இந்த நிலையில் சுசித்ரா மனநிலை பாதிக்கப்பட்டு இருந்ததாகவும், அவருடைய சமூக வலைத்தள பக்கம் ஹேக் செய்யப்பட்டுள்ளதாகவும் அவரது கணவர் கார்த்திக் குமார் கூறி நிலைமையை ஓரளவு சமாளித்தவுடன் இந்த பிரச்சினை முடிவுக்கு வந்தது.

இந்த நிலையில் தற்போது மேலும் ஒரு சுசித்ரா வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. டிக்டாக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பூப்பறித்து தரச்சொல்லும் காமெடி வீடியோவை பலர் வெளியிட்டு வரும் நிலையில் அதேபோன்ற ஒரு வீடியோவை சென்னை பாஷையில் சுசித்ரா பேசும் இந்த வீடியோவும் தற்போது வைரலாகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos