காதலில் விழுந்த தெருக்குரல் அறிவு.. வைரலாகும் புகைப்படம்!

பிரபல பாடகர் தெருக்குரல் அறிவு தனது காதலி குறித்த தகவல்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ள நிலையில் அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த காலா’ என்ற திரைப்படத்தில் பாடகராக அறிமுகமானவர் தெருக்குரல் அறிவு. அதன்பிறகு அவர் பல படங்களில் பாடினார் என்றும் குறிப்பாக ’என்ஜாய் என்ஜாமி’ என்ற தனிப்பாடல் அவரை உலக அளவில் பிரபலம் ஆகியது என்பதும், ஆனால் அதே நேரத்தில் இதே பாடல் அவருக்கு சில சர்ச்சைகளை ஏற்படுத்தி தந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது திரையுலகில் பிஸியாக இருக்கும் தெருக்குரல் அறிவு தனது சமூக வலைத்தளத்தில் தனது காதல் குறித்த அறிவிப்பை வெளியிட்டு உள்ளார். For miles together.. We are the wildest love of our ancestors kalpana_ambedkar என் திமிரான தமிழச்சி. என பதிவு செய்து காதலியின் கால்களை மட்டும் அவர் பதிவு செய்துள்ள போஸ்ட் தற்போது வைரலாகி வருகிறது. இதனையடுத்து தெருக்குரல் அறிவுக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

கல்பனா அம்பேத்கர் என்பதுதான் தனது காதலியின் பெயர் என்று கூறிய தெருக்குரல் அறிவு அவருடைய கால்களை மட்டும் தற்போது காட்டினாலும் விரைவில் முழு புகைப்படத்தை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் கல்பனாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெருக்குரல் அறிவு குறித்த பல போஸ்ட் இருப்பதை அடுத்து இவர்கள் ஒரு சில ஆண்டுகளாகவே காதலித்து வருகிறார்கள் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது

More News

விஷாலின் 'லத்தி' படத்தின் சூப்பர் அப்டேட்.. ரசிகர்கள் குஷி!

விஷால் நடித்த 'லத்தி' என்ற படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது என்பதை ஏற்கனவே பார்த்தோம். 

விஜய்க்கு மீண்டும் 'தலைவா' டேக்லைன் போட்ட பாடலாசிரியர்.. என்ன திட்டம்?

விஜய் நடித்த 'தலைவா' என்ற திரைப் படத்தின் டைட்டிலில் it's time to lead' என்ற டேக்லைன் இருந்த நிலையில் அந்த படம் பெரும் பிரச்சனைக்குள்ளானது என்பதும், அந்த டேக்லைன் நீக்கப்பட்டு ரிலீஸ் ஆனது

அடிதடியில் இறங்கிய ஷிவின் - தனலட்சுமி.. வேடிக்கை பார்க்கும் சக போட்டியாளர்கள்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த சில நாட்களாக போட்டியாளர்களுக்கு இடையே கடும் வாக்குவாதங்கள் எழுந்து வருகின்றன என்பதும் அது மட்டுமின்றி நேற்று அசீம் சக போட்டியாளரை அடிக்க கையை ஓங்கியதும்,

ஒரே புகைப்படத்தில் கமல், ராஜமெளலி, லோகேஷ் கனகராஜ், கெளதம் மேனன்: என்ன திட்டம்?

உலக நாயகன் கமலஹாசனுடன் பிரபல இயக்குனர்கள் எஸ்எஸ் ராஜமெளலி, கௌதம்

'வெண்ணிலா கபடி குழு' நடிகர் திடீர் மரணம்: திரையுலகினர் இரங்கல்!

பிரபல இயக்குனர் சுசீந்தரன் இயக்கத்தில் உருவான 'வெண்ணிலா கபடி குழு' என்ற திரைப்படத்தில் நடித்த நடிகர் ஹரி வைரவன் திடீரென காலமானதை அடுத்து திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.