எதிர்பாராத நேரத்தில் ரசிகைக்கு உதட்டில் முத்தமிட்ட பிரபல தமிழ் பாடகர்.. வீடியோ வைரல்..!


Send us your feedback to audioarticles@vaarta.com


பிரபல பாடகர் ஒருவர் மேடையில் பாட்டு பாடி கொண்டிருந்த நிலையில், ரசிகை ஒருவர் அவருக்கு எதிர்பாராத நிலையில் முத்தம் கொடுக்க, அவர் அந்த ரசிகைக்கு முத்தம் கொடுத்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
தமிழ் மட்டுமின்றி, தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என ஏராளமான மொழிகளில் பாடல்களை பாடியவர் பாடகர் உதித் நாராயணன். இந்த நிலையில், சமீபத்தில் மேடை நிகழ்ச்சி ஒன்றில் இவர் பாட்டு பாடிக்கொண்டிருந்த நிலையில், திடீரென ஏராளமான ரசிகைகள் அவரிடம் வந்து செல்பி எடுக்க முயற்சித்தனர்.
அப்போது ஒரு ரசிகை செல்பி எடுத்து விட்டு உடனே அவருக்கு முத்தம் கொடுக்க, அவர் பதிலுக்கு அந்த ரசிகைக்கு முத்தம் கொடுத்தார். இது குறித்த வீடியோ இணையத்தில் வெளியாகி, வைரலாகி வருகிறது.
உதித் நாராயணனுக்கு தற்போது கிட்டத்தட்ட 70 வயது ஆகும் நிலையில், அவர் தனது மகள் வயதில் உள்ள ரசிகைக்கு முத்தம் கொடுத்தது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் அதே நேரத்தில், இது ஒரு சாதாரணமான நிகழ்வு தான் என்றும், அவர் அன்பின் வெளிப்பாடாக தான் இதை செய்திருப்பார். அதில் தவறான நோக்கம் எதுவும் இருக்காது என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
பாடகர் உதித் நாராயணன் தமிழில் ’காதலன்’ ’முத்து’ ’மிஸ்டர் ரோமியோ’ ’கோயம்புத்தூர் மாப்பிள்ளை’ ’ரட்சகன்’ ’வேலை’ ’கண்ணெதிரே தோன்றினாள்’ ’காதலா காதலா’ ’நாம் இருவர் நமக்கு இருவர் ’உள்பட பல திரைப்படங்களில் பாடியுள்ளார்.
tip tip barsa paani udit ji ki garmi nahi bujha paa rhi seedhe ladkiyo ke jeebh choos rhe hain. 🤣😭 pic.twitter.com/7SpjKvmWVR
— ex. capt (@thephukdi) January 31, 2025
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments