பிரபல பின்னணி பாடகியின் கணவர் மறைவு

  • IndiaGlitz, [Monday,September 24 2018]

தமிழ், உள்பட பல்வேறு மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களை பாடிய பின்னணி பாடகி வாணி ஜெயராம் அவர்களின் கணவர் ஜெயராம் இன்று காலமானார்.

தமிழ்கத்தின் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த வாணி ஜெயராம் அவர்களின் இயற்பெயர் கலைவாணி. ஜெயராம் என்பவரை திருமணம் செய்த பின்னர் தனது பெயரை வாணி ஜெயராம் என்று மாற்றி கொண்டார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட இந்திய மொழிகள் பலவற்றில் சுமார் 10,000 பாடல்கள் பாடி உள்ள வாணி ஜெயராமின் பாடும் திறமைக்குக் பெரும் உதவியாக இருந்தவர் அவருடைய கணவர் ஜெயராம்

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக உடல்நலம் இன்றி இருந்த ஜெயராம் இன்று காலை காலமானார். அவருடைய மறைவிற்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.