அந்தரங்க வீடியோ அனுப்பிய மர்ம நபர்: ஸ்க்ரீன்ஷாட் எடுத்து வெளியிட்ட சூப்பர் சிங்கர் பாடகி!

  • IndiaGlitz, [Wednesday,June 16 2021]

பிரபல பாடகி ஒருவருக்கு மர்ம நபர் ஒருவர் அந்தரங்க வீடியோவை அனுப்பிய நிலையில் அந்த வீடியோவின் ஸ்க்ரீன்ஷாட்களை தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ள பாடகி, இது குறித்து புகாரளிக்கவும் உள்ளார் என்ற தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விஜய் டிவி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருபவர் பாடகி திவ்யா என்பது தெரிந்ததே. இவர் விஜய் நடித்த ’வில்லு’ விஷால் நடித்த ’தீராத விளையாட்டு பிள்ளை’ உள்பட ஒரு சில திரைப்படங்களிலும் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் திவ்யாவுக்கு அந்தரங்க வீடியோ ஒன்று மர்ம நபரிடம் இருந்து வந்துள்ளது. ஆணின் அந்தரங்க உறுப்பு காட்சிகள் கொண்ட இந்த வீடியோவை பார்த்த திவ்யா அதிர்ச்சி அடைந்து அதனுடைய ஸ்கிரீன்ஷாட் எடுத்து தனது இன்ஸ்டாகிராமில் பதிவுசெய்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:

எனக்கு Zoya Kait என்ற ஐடியில் இருந்து வந்த மெசேஜில், பிராண்ட் ஒன்றை புரோமோஷன் செய்ய வேண்டும் என்று கேட்டு கொள்ளப்பட்டது. ஆனால் அந்த ஐடி மீது எனக்கு சந்தேகம் ஏற்பட்டதால், பிராண்டின் ஐடியில் இருந்து தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொண்டேன். ஆனால் அதற்கு அவன், ஆணின் அந்தரங்க உறுப்பு வீடியோ ஒன்றை அனுப்பி, இது உங்களுக்கு திருப்தி அளிக்கிறதா? என கேட்டான். இதுபோன்ற நபர்கள் கட்டாயம் தண்டிக்கப்பட வேண்டும். புகார் அளிக்கவும், நடவடிக்கை எடுக்கவும் நீங்கள் உதவ வேண்டும் என்று கூறி அந்தரங்க வீடியோ அனுப்பிய நபரின் ஐடியின் ஸ்க்ரீன்ஷாட்டையும் பகிர்ந்துள்ளார்.

பாடகி திவ்யாவின் இந்த பதிவை அடுத்து அந்தரங்க வீடியோ அனுப்பிய மர்ம நபருக்கு ரசிகர்கள் தங்களது கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர்.

More News

தேசிய விருது பெற்ற இந்த பிரபல இயக்குனருடன் இணைகிறாரா ஆர்ஜே பாலாஜி!

'எல்கேஜி' மற்றும் 'மூக்குத்தி அம்மன்' ஆகிய இரண்டு திரைப்படங்களை இயக்கி நடித்த ஆர்ஜே பாலாஜி தற்போது பாலிவுட் படம் ஒன்றில் ரீமேக்கை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

கொரோனா பாதிப்பில் இருந்து மீண்ட ஒருவர் ரத்ததானம் செய்யலாமா?

ரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்கு முன்பு விருப்பம் உடைய இளைஞர்கள் இரத்ததானம் செய்ய முன்வரவேண்டும்

பச்சை நிறத்தில் பூஞ்சை தொற்று… ஒருவர் பாதிக்கப்பட்டதாக அதிர்ச்சி தகவல்!

இந்தியாவில் கடந்த சில மாதங்களாகவே கொரோனா நோய்த்தொற்றில் இருந்து மீண்டவர்களுக்கு கருப்பு பூஞ்சை

என்னை கருவாச்சின்னு நிறைய பேர் கிண்டல் செஞ்சாங்க: பாடகி ஸ்வாகதா பேட்டி

பாடகி மற்றும் நடிகையான ஸ்வாகதா தன்னை சிறுவயதில் கருவாச்சி என்று பலர் கிண்டல் செய்து உள்ளார்கள் என்று நமக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் கூறியுள்ளார்.

சூரியனையே விழுங்கும் Blackholes… பேரண்டத்தில் அதிசயம் நிகழ்வது எப்படி?

அறிவியல் அறிஞர்களின் கூற்றுப்படி கருந்துளைகள் (Blackholes) என்பது மிகப்பெரிய கிரகம் அல்லது நட்சத்திரங்கள் அழியும்போது அல்லது