close
Choose your channels

சாதனை செய்யப்போகும் படத்தை முதன்முதலில் பார்த்த ஏ.ஆர்.ரஹ்மான்!

Saturday, October 23, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சிங்கிள் ஷாட்டில் எடுக்கப்பட்ட உலகின் முதல் படம் என்ற பெருமைக்குரிய சாதனையை செய்ய போகும் ‘இரவின் நிழல்’ என்ற படத்தை இசைப்புயல் ஏஆர் ரகுமான் அவர்கள் முதன்முதலில் பார்த்ததாக இயக்குனர் பார்த்திபன் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இயக்குநர் பார்த்திபன் இயக்கி வரும் திரைப்படம் ’இரவின் நிழல்’. இந்த படத்திற்கு ஏஆர் ரகுமான் இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது பின்னணி இசை பணிகள் தொடங்கி உள்ளதாக பார்த்திபன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:

இரவின் நிழல்-இன்று இசை புயல் ஏ.ஆர்.ரஹ்மான் பின்னணி இசை கோர்ப்பு இனிதே துவங்கியது. முழு படத்தை முதலில் பார்த்ததே ஆஸ்கார் தான். ”இது சிங்கிள் ஷாட் முதல் படம் மட்டுமல்ல முதன்மையான படமாகவும் உதாரண படமாகவும் இருக்கும் என பாராட்டி கிபோர்டில் விரல் ஓட்டினார் வைரல் ஆகப் போகும் இசை பிரள்யத்திற்காக! என்று பதிவு செய்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.