ஏ.ஆர்.ரஹ்மானுக்கு நன்றி கூறிய அகில உலக சூப்பர் ஸ்டார்: ஏன் தெரியுமா?

  • IndiaGlitz, [Tuesday,December 10 2019]

அகில உலக சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் நடிகர் சிவா நடித்த ’சுமோ’ என்ற படத்தின் டிரைலரை சற்று முன்னர் இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் அவர்கள் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதனை அடுத்து நடிகர் சிவா, ஏஆர் ரஹ்மான் அவர்களுக்கு தனது நன்றியை தெரிவித்துள்ளார்

முழுக்க முழுக்க காமெடி அம்சங்களைக் கொண்ட ’சுமோ’ திரைப்படத்தின் டிரைலர் அனைவரும் ரசிக்கும் வகையில் உள்ளது. ஜப்பானிலிருந்து கடலில் மயக்கமற்ற மிதந்து வரும் சுமோ வீரர் ஒருவரை கடற்கரையில் பார்க்கும் சிவா, தனது வீட்டிற்கு அழைத்து வருகிறார். அவருக்கு தீனி போட முடியாமல் தவித்து கொண்டிருக்கும் இருக்கும் நிலையில், அவர் யார்? அவருடைய பின்னணி என்ன? ஜப்பானில் இருந்து தமிழ்நாட்டிற்கு ஏன் மிதந்து வந்தார் என்பதை கண்டறிய அவருடன் சிவா குழுவினர் ஜப்பான் செல்கின்றனர்

ஜப்பான் சென்றவுடன் நடக்கும் திடுக்கிடும் திருப்பங்கள், சிவா உடன் இருப்பவர் ஒரு உண்மையான சுமோ வீரர் என்பதும் தெரிகிறது. அதன் பின் நடக்கும் சுமோ போட்டிகளில் வெற்றி பெறுவது யார்? போன்ற விறுவிறுப்பான காட்சிகளை கொண்டதுதான் இந்த சுமோ படத்தின் கதை என்பது என தெரிகிறது.

வழக்கம்போல் நடிகர் சிவா தனது அசால்ட்டான நகைச்சுவை நடிப்பை இந்த படத்திலும் வெளிப்படுத்தியுள்ளார். சுமோ வீரராக வரும் அந்த ஜப்பான் நடிகர் ஒரு வார்த்தைகூட வசனம் பேசவில்லை என்றாலும் அவருடைய நடிப்பு குறிப்பிட்டு சொல்லும் வகையில் உள்ளது. ஒரு வித்தியாசமான கதையை தேர்வு செய்துள்ள அறிமுக இயக்குனர் ஹோசிமின், இந்த படத்தை ஒரு நகைச்சுவை கலந்த விறுவிறுப்பான படமாக உருவாக்கி இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நிவாஸ் கே பிரசன்னா இசையில், வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படம் வரும் பொங்கலன்று வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது

More News

உருவாகிறது 'சரவணா ஸ்டோர்' அருள் சரவணனின் மாபெரும் ரசிகர் மன்றம்.

சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனர்களில் ஒருவரான அருள் சரவணன் சமீபத்தில் படம் ஒன்றில் நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகின

ஊர் முழுக்க திருடர்கள் மட்டும்.. தீரன் படத்தில் வருவது போல் தப்பித்த தமிழக போலீஸ்.

சென்னையில் மூதாட்டிகளை குறி வைத்து திருடி வந்த ஆந்திராவை சேர்ந்த ஆட்டோ ராணிகளில் ஒருவரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.

லண்டன் போலீசில் சிக்கிய ரஜினி-தனுஷ் பட நாயகி!

ரஜினிகாந்த் நடித்த 'சிவாஜி', தனுஷ் நடித்த 'திருவிளையாடல் ஆரம்பம்' உள்பட பல தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் நடித்த பிரபல நடிகை ஸ்ரேயா, லண்டன் போலீஸ் வலையில் சிக்கி இருப்பது

மாயமான விமானம்..!

சிலி நாட்டின் ராணுவ வீமானம் அன்டார்டிகாவில் உள்ள அந்நாட்டுத் தளத்துக்குச் செல்லும் வழியில் திடீரென மாயமாகிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது

ஒரு அக்கா இருந்தா ரெண்டு அம்மாவுக்கு சமம்: 'தம்பி' டிரைலர்

கார்த்தி, ஜோதிகா முதல் முதலாக ஒரே படத்தில் இணைந்து நடிக்கும் 'தம்பி' படத்தின் டீசர் சமீபத்தில் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் சற்று முன்னர் இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது