தூக்கு மாட்டிக் கொள்வது போல் செல்பி எடுத்த வாலிபர்: திடீரென நேர்ந்த விபரீதம் 

சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த வாலிபர் ஒருவர் தூக்கு மாட்டிக் கொள்வது போல் செல்பி எடுக்க முயன்ற நிலையில் எதிர்பாராதவிதமாக தூக்கில் தொங்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தேனி மாவட்டம் பொம்மிநாயக்கன்பட்டி என்ற பகுதியை சேர்ந்த கூலித் தொழிலாளியான திரவியம் என்பவர் சிவகங்கை மாவட்டத்திலுள்ள தேவகோட்டையில் தனது உறவினர் வீட்டில் தங்கி ஆழ்துளை கிணறு அமைக்கும் பணியில் ஈடுபட்டு வந்தார்.

இந்த நிலையில் செல்பி மோகம் அதிகம் உள்ள திரவியம், நேற்று காலை வேலைக்கு செல்வதற்கு முன்னர் தனது அறையில் செல்பி எடுக்க முயன்றார். தூக்கில் தொங்குவது போன்று வித்தியாசமாக செல்பி எடுத்து சமூக வலைதளங்களில் பதிவு செய்ய வேண்டும் என விரும்பி அதற்கான ஏற்பாடு செய்து செல்பி எடுத்துக் கொண்டிருந்தார்.

முதல் இரண்டு செல்பிகளை எடுத்து விட்டு மூன்றாவது செல்பி எடுக்க முயன்றபோது எதிர்பாராதவிதமாக தூக்கு கயிறு அவரது கழுத்தை இறுக்கியது. இதிலிருந்து அவர் மீண்டு வர முடியாமல் பரிதாபமாக உயிர் இழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் அவருடைய உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

செல்பி மோகத்தால் ஏற்கனவே பல இளைஞர்கள் உயிரிழந்துள்ள நிலையில் தற்போது மேலும் ஒரு உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

More News

ரஜினி இதை செய்தால் மட்டுமே அவரது கட்சியில் சேருவேன்: ராகவா லாரன்ஸ்

பிரபல நடிகர், நடன இயக்குனர் மற்றும் இயக்குனருமான ராகவா லாரன்ஸ் சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் கட்சி ஆரம்பித்தால் அவரது கட்சியில் இணைவேன் என்று தெரிவித்திருந்தார்.

தோல்வி இல்லாத லைப் இண்ட்ர்ஸ்ட்டா இருக்காது: நீட் மாணவர்களுக்கு ஜிவி பிரகாஷ் அறிவுரை

இன்று தமிழகம் உள்பட நாடு முழுவதும் நீட் தேர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் நேற்று நீட்தேர்வு அச்சம் காரணமாக ஒரே நாளில் மூன்று மாணவர்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம்

விக்ரம் பட நடிகைக்கு திருமணம்: திரையுலகினர் வாழ்த்து 

விக்ரம் நடித்துவரும் 'கோப்ரா' என்ற படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்து வருபவர் நடிகை மியா ஜார்ஜ். ஏற்கனவே தமிழில் 'அமர காவியம்' 'ஒரு நாள் கூத்து' 'வெற்றிவேல்' 'இன்று நேற்று நாளை' உள்ளிட்ட

அமெரிக்க காட்டுத்தீயில் சிக்கி கொண்ட தனுஷ்-சிம்பு நடிகை!

உலகிலேயே மிக அதிகமாக கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்காவுக்கு மேலும் ஒரு சோதனையாக காட்டுத்தீ வடிவில் வந்துள்ளது

மாநில அரசுக்கு எதிராக கவர்னரிடம் புகார் கொடுத்த பிரபல நடிகை: பரபரப்பு தகவல் 

கடந்த சில நாட்களாக மகாராஷ்டிர அரசுக்கும் பிரபல நடிகை கங்கனா ரனாவத்துக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டு வருவது தெரிந்ததே. மகாராஷ்டிரா மாநில அரசை கங்கனா கடுமையாக விமர்சனம்