தாயுடன் தகாத உறவு: சரமாரியாக குத்தி கொலை செய்த மகன்!

  • IndiaGlitz, [Thursday,April 11 2019]

தாயுடன் தகாத உறவு வைத்திருந்த ஒருவரை அவருடைய மகன் சரிமாரியாக குத்தி கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் சிவகங்கையில் நடந்துள்ளது.

சிவகங்கையை சேர்ந்த அருண்குமார் என்பவரின் தாயாரும், அரசு மருத்துவமனையில் பணிபுரியும் தமிழ்ச்செல்வன் என்பவரும் தகாத உறவில் இருந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அறிந்த அருண்குமார் இருவரையும் கண்டித்துள்ளார். மேலும் இனிமேல் தன்னுடைய வீட்டிற்கு வரக்கூடாது என்று தமிழ்ச்செல்வனையும் அருண்குமார் எச்சரித்துள்ளார்.

இந்த நிலையில் தன்னுடைய எச்சரிக்கையை மீறி தொடர்ந்து தனது தாயுடன் கள்ளக்காதலில் தமிழ்ச்செல்வன் ஈடுபட்டிருந்ததை அறிந்ததும் ஆத்திரமடைந்த அருண்குமார், நேற்று தமிழ்ச்செல்வன் பணிபுரிந்து கொண்டிருந்த அரசு மருத்துவமனைக்கு சென்று அங்கு நோயாளிகளுக்கு மருந்து கொடுத்து கொண்டிருந்த தமிழ்ச்செல்வனை கத்தியால் சரமாரியாக குத்தி கொலை செய்தார். மேலும் கொலை செய்தவுடன் தப்பிக்க முயற்சி செய்யாமல் அதே இடத்தில் உட்கார்ந்துவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் சிவகங்கை போலீசார் சம்பவ இடத்திற்கு உடனடியாக வந்து அருண்குமாரை கைது செய்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

More News

அதிமுகவுக்கு எதிராக தனியாக களமிறங்கிய விஜய் ரசிகை

வரும் மக்களவை தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் பிரச்சாரம் செய்து வரும் நிலையில் விஜய் ரசிகை ஒருவர் அதிமுகவுக்கு எதிராக தனியாக களமிறங்கியுள்ளார்.

பப்ளிசிட்டி வேணும்ன்னா வேற எதையாவது செய்யலாமே! கஸ்தூரிக்கு லதா கண்டனம்

நடிகை கஸ்தூரி நேற்று முன்தினம் நடைபெற்ற சென்னை மற்றும் கொல்கத்தா போட்டி குறித்து ஒரு டுவீட்டை பதிவு செய்திருந்தார்.

கன்னத்தை தடவியதை கூறியது குற்றமா? வருத்தம் தெரிவித்த கஸ்தூரி

எம்ஜிஆர், லதாவை தடவின மாதிரி சிஎஸ்கே அணி இந்த தடவு தடவுகிறதே என்று நேற்று முன் தினம் நடைபெற்ற ஐபிஎல் போட்டி குறித்து கருத்து தெரிவித்த கஸ்தூரிக்கு கண்டனங்கள் குவிந்து வருகிறது.

மனைவியிடம் வருத்தம் தெரிவித்த பொல்லார்டு

நேற்று நடைபெற்ற பஞ்சாப் மற்றும் மும்பை அணிகளுக்கு இடையே நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்து 197 ரன்கள் குவித்தது.

'தூம் 4' தயாரியுங்கள்: போனிகபூருக்கு ஐடியா கொடுக்கும் அஜித் ரசிகர்கள்

தல அஜித் நடித்துள்ள 'நேர்கொண்ட பார்வை' திரைப்படம் படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில் மீண்டும் எச்.வினோத் இயக்கத்தில் போனிகபூர் தயாரிப்பில் அஜித் நடிக்கவுள்ள திரைப்படம் விரைவில் தொடங்கவுள்ளது.