close
Choose your channels

டிடிவி தினகரன் மகள் திருமணத்தில் சிவாஜி குடும்பத்தினர்: வைரல் புகைப்படங்கள்!

Thursday, September 16, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மகள் திருமணம் இன்று திருவண்ணாமலையில் நடைபெற்று வரும் நிலையில் இந்த திருமணத்தில் சிவாஜி குடும்பத்தினர் கலந்து கொண்ட புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

டிடிவி தினகரனின் மகள் ஜெயஹரிணி என்பவருக்கும் தஞ்சை காங்கிரஸ் பிரமுகர் துளசி அய்யா வாண்டையார் பேரன் இராமநாத துளசி அய்யா வாண்டையார் அவர்களுக்கும் இன்று திருவண்ணாமலையில் திருமணம் நடைபெறுகிறது. இந்த திருமணத்தில் சசிகலா உள்பட பல அரசியல் பிரபலங்கள் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் டிடிவி தினகரன் மகள் திருமணத்தில் சிவாஜி கணேசன் குடும்பத்தினர் கலந்துகொண்டனர். சிவாஜிகணேசனின் மூத்த மகன் ராம்குமார் மற்றும் அவருடைய மனைவி, இளைய மகன் பிரபு மற்றும் அவருடைய மனைவி ஆகியோர் இந்த திருமணத்தில் கலந்து கொண்டனர். டிடிவி தினகரன், சிவாஜி குடும்பத்தினர்களை வரவேற்கும் காட்சியின் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.