close
Choose your channels

சினிமாவில் அறிமுகமாகும் சிவாஜியின் 4வது பேரன்.. தயாரிப்பு நிறுவனம் குறித்த தகவல்..!

Saturday, May 10, 2025 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் இரண்டு மகன்கள் ஆன ராம்குமார் மற்றும் பிரபு ஆகிய இருவருமே நடிகர்கள் என்பதும், ராம்குமார் ஒரு சில படங்களில் மட்டும் நடித்தார் என்றாலும், பிரபு நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் என்பதும் தெரிந்தது.

இந்த நிலையில், சிவாஜி கணேசனின் பேரன்களும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நடிக்க ஆரம்பித்துவிட்டனர். பிரபுவின் மகன் விக்ரம் பிரபு, 'கும்கி' என்ற திரைப்படத்தில் அறிமுகம் ஆகி, அதன் பிறகு பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.

அதேபோல், ராம்குமார் மகன் துஷ்யந்த் கடந்த 2003 ஆம் ஆண்டு 'மச்சி' என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி, சில படங்களில் நடித்தார். மேலும், இன்னொரு மகனான சிவாஜி தேவ், 'சிங்கக்குட்டி' உட்பட சில படங்களில் நடித்தார்.

இந்த நிலையில், தற்போது ராம்குமாரின் இளைய மகன் தர்ஷன் என்பவர் விரைவில் திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. அவர் நடிக்கும் முதல் படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும், விரைவில் இந்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment