close
Choose your channels

நடிகர் திலகத்தை ஜீன்ஸ் பேண்ட்டில் பார்த்ததுண்டா? அரிய புகைப்படம்!

Tuesday, June 29, 2021 • தமிழ் Comments

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் ’பராசக்தி’ என்ற திரைப்படத்தில் அறிமுகமாகி அதன் பின்னர் 250க்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பதும் தமிழ் சினிமா நடிகர்களுக்கு அவர் ஒரு குருவாக இருந்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது

தமிழ் சினிமாவில் சிவாஜி கணேசன் ஏற்காத வேடம் இல்லை. குறிப்பாக பாரதியார், வ.உ. சிதம்பரனார் உள்பட பல சுதந்திர போராட்ட வீரர்கள் கேரக்டர்களிலும் சிவன், கர்ணன், முதல் பல பக்தி கேரக்டர்களிலும் கல்லூரி மாணவர் முதல் குடுகுடு கிழவர் வரையிலும் பெண் கேரக்டரிலும் நடித்துள்ளார் என்பது குறிப்ப்பிடத்தக்கது. சிவாஜியின் நடிப்பு சாயல் இல்லாமல் எந்த ஒரு நடிகராலும் நடிக்க முடியாது என்பதே நிதர்சனமான உண்மை என்பது குறிப்பிடத்தக்கது 

இந்த நிலையில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் ஜீன்ஸ் பேண்ட் அணிந்த புகைப்படம் ஒன்று தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தை அவருடைய ரசிகர்கள் ரசித்தவாறே இணையதளங்களில் பகிர்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த புகைப்படம் கடந்த 1996ஆம் ஆண்டு சிவாஜி கணேசன் அமெரிக்கா சென்றபோது எடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Get Breaking News Alerts From IndiaGlitz