இசைஞானியை மிஸ் செய்த சிவகார்த்திகேயன்

  • IndiaGlitz, [Thursday,April 07 2016]
இசைஞானி இளையராஜாவின் இசையில் உருவாகியுள்ள 'ஓயே' திரைப்படம் விரைவில் வெளியாக படக்குழுவினர் தரப்பில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வரும் நிலையில் இந்த படத்தின் இயக்குனர் ஃபிரான்சிஸ் மார்க்கஸ் முதலில் இந்த படத்தின் ஹீரோவாக நடிக்க சிவகார்த்திகேயனை அணுகினாராம். படத்தின் கதை சிவகார்த்திகேயனுக்கு பிடித்திருந்தாலும், வேறொரு படத்தில் நடிக்க கமிட் ஆகியிருந்ததால், அவரால் இந்த படத்தில் நடிக்க முடியவில்லையாம். அதேபோல் இன்னொரு பெரிய ஹீரோவின் கால்ஷீட் தேதியும் கிடைக்கவில்லையாம்.

எனவேதான் இயக்குனர் ஃபிரான்சிஸ், புதுமுகம் கீதன் பிரிட்டோ மற்றும் ஈஷா ஆகியோர்களை நடிக்க வைத்ததாக கூறினார். மேலும் இந்த படத்தின் கதை தேவர் மகன்' படத்தை போலவே தந்தைக்கும் மகனுக்கும் இடையே உள்ள உறவை நெகிழ்ச்சியுடம் கூறுவது என்றும் இந்த படத்திற்காக ஹீரோ கீதன் சிலம்பாட்டம் பழகியதாகவும் கூறினார்.
இசைஞானியின் இசையில் முதன்முதலாக நடிக்கவிருக்கும் வாய்ப்பை சிவகார்த்திகேயன் இழந்தாலும் இனிவரும் காலங்களில் அவர் கண்டிப்பாக இசைஞானியின் இசையில் உருவாகும் படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

More News

ஏ.ஆர்.ரஹ்மானின் '24' டிராக் லிஸ்ட்

சூர்யா நடிப்பில் விக்ரம் குமார் இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகியுள்ள '24' படத்தின் பாடல்கள் வரும் 11ஆம் தேதி...

ஒரே மாத இடைவெளியில் ஹாட்ரிக் அடிப்பாரா சமந்தா?

கோலிவுட், டோலிவுட் ஆகிய இரண்டு திரையுலகிலும் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருவதோடு இரு மொழிகளிலும் முன்னணி ஹீரோக்களுடன் சமந்தா நடித்து வருகிறார்...

'காக்கா முட்டை'க்கு கிடைத்த மேலும் ஒரு அந்தஸ்து

தனுஷின் தயாரிப்பில் மணிகண்டன் இயக்கத்தில் உருவான 'காக்கா முட்டை' திரைப்படம் ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டது, உலக திரைப்பட விழாக்களில்....

விஜய் அம்மாவுக்கு பிடித்த அஜித் படங்கள்

இளையதளபதி விஜய்யின் தாயார் என்ற அடைமொழி மட்டுமின்றி சிறந்த திரைக்கதை ஆசிரியர், பாடகர், இயக்குனர் என பல அவதாரங்களில் திகழ்ந்தவர்...

மனிதன்' டிராக்லிஸ்ட் வெளியீடு

'கெத்து' படத்தை அடுத்து உதயநிதி ஸ்டாலின் நடித்து வந்த 'மனிதன்' திரைப்படம் சமீபத்தில் முடிவடைந்து போஸ்ட் புரடொக்ஷன்ஸ்...