மதிப்பெண் மட்டுமே வாழ்க்கையில்லை. பிளஸ் 2 மாணவர்களுக்கு சிவகார்த்திகேயன் அறிவுரை

  • IndiaGlitz, [Friday,May 12 2017]


தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று காலை 10 மணிக்கு வெளியாகவுள்ளது. பள்ளி மற்றும் தனித்தேர்வு மாணவர்கள் என மொத்தம் 9 லட்சத்து 30 ஆயிரம் மாணவ-மாணவிகள் இந்த தேர்வின் முடிவை இன்று எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

பள்ளி வாழ்க்கை முடிந்து கல்லூரி வாழ்க்கை தொடங்கப்போகும் நிலையில் மாணவர்களுக்கு இந்த தேர்வில் கிடைக்கப்போகும் மதிப்பெண்கள் மிக முக்கியமானது. எனவே டென்ஷனுடன் தேர்வு முடிவையும், வரப்போகும் மதிப்பெண்ணையும் எதிர்பார்த்து காத்திருக்கும் மாணவ, மாணவிகளுக்கு பிரபல நடிகர் சிவகார்த்திகேயன் தனது சமூக வலைத்தளத்தில் அறிவுரை ஒன்றை கூறியுள்ளார்

'இன்று பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியாகிறது. எந்த முடிவு வந்தாலும் அதை எதிர்கொள்ள தயாராக இருங்கள். இந்த தேர்வில் கிடைக்கும் மதிப்பெண்கள் நீங்கள் படிக்கும் படிப்பை மட்டுமே முடிவு செய்யத்தக்கது, உங்கள் வாழ்க்கையை அல்ல. வாழ்க்கையில் இன்னும் நிறைய பயணங்களை சந்திக்க உள்ள நீங்கள் மன தைரியத்துடன் இருங்கள்' என்று சிவகார்த்திகேயன் கூறியுள்ளார்

ஒவ்வொரு வருடமும் மதிப்பெண் குறைவு அல்லது தேர்வில் தோல்வி காரணமாக பல மாணவர்கள் தற்கொலை முடிவை எடுத்து வருகின்றனர். இந்த ஆண்டு எந்த மாணவரும் அதுபோல் ஒரு முடிவை எடுத்துவிட கூடாது என்பதே அனைவரின் விருப்பமாக உள்ளது. இதைத்தான் சிவகார்த்திகேயனின் டுவீட்டும் மறைமுகமாக தெரிவிக்கின்றது. தற்போது புதுப்புது படிப்புகள் அறிமுகமாகியுள்ளதால் எவ்வளவு மதிப்பெண் கிடைத்தாலும் அதற்குரிய படிப்புகள் படித்து வாழ்க்கையில் முன்னேறலாம் என்ற நிலை உள்ளது. எனவே மாணவர்கள் எதையும் எதிர்கொள்ளும் மனநிலையை வளர்த்து கொள்ள வேண்டும் என்பதே அனைவரின் அறிவுரையாக உள்ளது.

More News

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு: தேர்ச்சி விகிதம் 92.1%

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் சற்று முன்னர் வெளியாகியுள்ளது. இந்த முடிவின்படி தேர்வு எழுதிய 92.1 சதவீதம் மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்

சுப்ரீம் கோர்ட்டில் மன்னிப்பு கேட்டார் நீதிபதி கர்ணன்

கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணனை கைது செய்து ஆறு மாதங்கள் சிறையில் அடைக்க சுப்ரீ கோர்ட் நேற்று முன் தினம் உத்தரவிட்டதை அடுத்து, நீதிபதி கர்ணன் தலைமறைவானதாக கூறப்பட்டது.

மோகன்லாலின் 'த்ரிஷ்யம்' வசூலை வீழ்த்திய 'பாகுபலி 2'

பிரமாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலியின் 'பாகுபலி 2' திரைப்படம் கடந்த மாதம் 28ஆம் தேதி வெளியாகி உலகம் முழுவதும் சாதனை வசூல் செய்து வருகிறது.

இளையதளபதியின் 'போக்கிரி 2': பிரபல தயாரிப்பாளர் அதிரடி முடிவு

இளையதளபதி விஜய், அசின் நடிப்பில் பிரபுதேவா இயக்கிய படம் 'போக்கிரி'. விஜய் நடித்த படங்களில் சூப்பர் ஹிட் ஆன படங்களில் ஒன்று

'விவேகம்' டீசர் சாதனை குறித்து Forbes பத்திரிகையில் செய்தி

கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் வெளியான 'பாகுபலி 2' என்ற தென்னிந்திய திரைப்படம் உலகின் கவனத்தை ஈர்த்த நிலையில் நேற்று நள்ளிரவு வெளியான 'விவேகம்' படத்தின் டீசர் சாதனை மீண்டும் உலகையே தென்னிந்தியா பக்கம் திரும்பி பார்க்க வைத்துள்ளது