சிவகார்த்திகேயனுடன் முதல்முறையாக ஜோடி சேரும் அஞ்சலி?

  • IndiaGlitz, [Wednesday,September 04 2019]

சிவகார்த்திகேயன் நடித்து முடித்துள்ள ’நம்ம வீட்டு பிள்ளை’ திரைப்படம் இம்மாத இறுதியில் வெளியாக உள்ள நிலையில், அவர் நடித்து வரும் அடுத்த படமான ’ஹீரோ’ என்ற படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விறுவிறுப்பாக போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது

மேலும் ’இன்று நேற்று நாளை’ இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ஒரு படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சமீபத்தில் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கும் படமொன்றிலும் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளார் என்ற அறிவிப்பு வெளிவந்தது. இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தொடங்கி உள்ள நிலையில் இந்த படத்தின் நாயகிகளில் இறுதி செய்யும் பணியில் இயக்குனர் விக்னேஷ் சிவன் தீவிரமாக உள்ளார்

இந்த நிலையில் சிவகார்த்திகேயன் ஜோடியாக இந்த படத்தில் அஞ்சலி நடிப்பார் என கூறப்படுகிறது. இந்த தகவல் உறுதி செய்யப்பட்டால் சிவகார்த்திகேயனுடன் அஞ்சலி முதல்முறையாக இணைகிறார் என்பது குறிப்பிடத்தக்கது., மேலும் இந்த படத்தில் பிரபல பாலிவுட் நடிகை கல்கி கோச்லின் என்பவரும் முக்கிய கேரக்டரில் நடிக்கவுள்ளார். அனிருத் இசையமைக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது