close
Choose your channels

வேலைக்காரன்' படப்பிடிப்பு குறித்த முக்கிய தகவல்:

Monday, November 13, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சிவகார்த்திகேயன், நயன்தாரா நடிப்பில் உருவாகி வந்த வேலைக்காரன் படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் பாடல் ஒன்று படமாக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்றுடன் இந்த படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிந்துவிட்டதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டதை அடுத்து தற்போது போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

இந்த படத்தை வரும் நிலையில் வரும் டிசம்பர் 22ஆம் தேதி ரிலீஸ் செய்ய அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது. சமீபத்தில் வெளியான நயன்தாராவின் 'அறம்' திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ள நிலையில் அவருடைய படமான 'வேலைக்காரன்' படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மோகன்ராஜா இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் சிவகார்த்திகேயன், பகத்பாசில், நயன்தாரா, சினேகா, பிரகாஷ்ராஜ், தம்பி ராமையா, விஜய் வசந்த், ஆர்ஜே பாலாஜி, சதீஷ், ரோபோ சங்கர் உள்பட பலர் நடித்துள்ளனர். ராம்ஜி ஒளிப்பதிவில் விவேக் ஹர்சன் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.