சென்னை முதலிடம் பெறாமல் இருப்பது உங்களால்தான்: மாறி மாறி கலாய்த்து கொண்ட தமிழ் நடிகர்கள்

  • IndiaGlitz, [Sunday,January 24 2021]

அழகான ஆண்கள் அதிகம் வசிக்கும் பகுதி சேலம் என சமீபத்தில் கருத்துக் கணிப்பு ஒன்று நடத்தப்பட்டதாக ஊடகம் ஒன்றில் செய்தி வெளியானது. இந்த செய்தியை தனது டுவிட்டரில் வெளியிட்ட நடிகர் சதீஷ் தனது மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார். நடிகர் சதீஷ் சேலத்தை சேர்ந்தவர் என்பதால் தன்னுடைய மாவட்டம் அழகான ஆண்கள் அதிகம் வசிக்கும் பகுதி என பெருமையுடன் அவர் குறிப்பிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் சிவகார்த்திகேயன் தன்னுடைய டுவிட்டரில் ’இந்த கருத்துக்கணிப்பு நீங்கள் சென்னையில் செட்டில் ஆனதும் நடத்தப்பட்டது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். மேலும் நீங்கள் சென்னையில் செட்டில் ஆனதால் தான் சென்னை முதல் இடம் பெறவில்லை என்பதையும் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று பதிலடி கொடுத்துள்ளார்

சிவகார்த்திகேயனின் இந்த பதிவுக்கு பதில் அளித்த சதீஷ் ’ரசிகர்களே யாரும் கடையடைப்பு, போராட்டம், பேரணியில் ஈடுபட வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். நண்பரது அட்மின் செய்த தவறு என்றும் இனி இவ்வளவு ஓபனாக கலாய்க்க மாட்டேன் என்றும் வருத்தம் தெரிவித்துக் கொண்டார். நன்றி வணக்கம் என்று அவர் பதிவு செய்துள்ளார்

சிவகார்த்திகேயன், சதீஷ் மாறி மாறி ஒருவரை ஒருவர் கலாய்த்து கொண்ட இந்த பதிவுகள் தற்போது வைரலாகி வருகிறது

More News

'விஸ்வாசம்' இசையால் இமானுக்கு வாழ்த்து தெரிவித்த நடிகர்!

பிரபல இசையமைப்பாளர் டி இமான் அவர்களின் பிறந்தநாள் இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது என்பதும், அவருக்கு ஒட்டுமொத்த திரையுலகைச் சேர்ந்தவர்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்

பிக்பாஸ் சோம்சேகரின் முதல் வீடியோ: உடல்நிலை குறித்த முக்கிய தகவல்!

நடைபெற்று முடிந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் அனைவரின் அன்புக்குரியவரும் பிக்பாஸ் இறுதிப்போட்டியில் தகுதி பெற்றவர்களில் ஒருவராக இருந்தவர் சோமசேகர் என்பது தெரிந்ததே

ரம்யாவை திட்டிய நெட்டிசன்களுக்கு அனிதா சம்பத் பதிலடி!

பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான ரம்யா பாண்டியனை நெட்டிசன்கள் இன்னும் விமர்சனம் செய்து வருகையில் அந்த விமர்சனம் குறித்து அனிதா சம்பத் தனது சமூக வளைதளத்தில் பதிலடி கொடுத்துள்ளார் 

விஷாலின் 'சக்ரா' ரிலீஸ் தேதி அறிவிப்பு: ஓடிடியா? தியேட்டரா?

விஷால் நடித்து முடித்துள்ள 'சக்ரா' என்ற திரைப்படம் ரிலீஸ்க்கு ஒரு சில மாதங்களுக்கு முன்னரே தயாராகி விட்டது என்றாலும் இந்த படம் குறித்த வழக்கு ஒன்று நீதிமன்றத்தில் இருந்ததால் இந்த படத்தின்

சூர்யாவின் அடுத்த படத்தின் சூப்பர் அப்டேட் தந்த சன் பிக்சர்ஸ்!

சூர்யாவின் 'சூரரைப்போற்று' திரைப்படம் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஓடிடியில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றதை அடுத்து அவருடைய அடுத்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம்