சிவகார்த்திகேயன் படத்தில் இணையும் விக்னேஷ் சிவன்!

சிவகார்த்திகேயன் நடிக்கவிருக்கும் அடுத்த திரைப்படத்தில் விக்னேஷ் சிவன் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சிவகார்த்திகேயன் நடித்த ’டான்’ திரைப்படம் நாளை உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகவுள்ளது என்பது தெரிந்ததே. மேலும் அவர் நடித்துள்ள ’அயலான்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் கிட்டத்தட்ட இறுதிகட்டத்தில் உள்ளன. எனவே விரைவில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் சிவகார்த்திகேயன் தற்போது அனுதீப் இயக்கத்தில் தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாகி வரும் ’எஸ்.கே 20’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் 90 சதவீத படப்பிடிப்பு முடிந்துவிட்டதாகவும் இன்னும் இரண்டு பாடல்களின் படப்பிடிப்பு மட்டுமே உள்ளன என்றும் அந்த பாடல்களின் படப்பிடிப்பு விரைவில் வெளிநாட்டில் படமாக்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன .

இந்த நிலையில் இந்த படத்தில் 5 பாடல்கள் இடம் பெற்றிருக்கும் நிலையில் ஒரு பாடலை சிவகார்த்திகேயன் எழுதியுள்ளதாகவும், இன்னொரு பாடலை அறிவு எழுதியுள்ளதாகவும் தெரிகிறது. மேலும் இரண்டு பாடல்களை விக்னேஷ் சிவன் மற்றும் ரோகேஷ் ஆகியோர் எழுதி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே சிவகார்த்திகேயன் நடித்த ’நம்ம வீட்டு பிள்ளை’ ‘டான்’ ஆகிய படங்களுக்கு விக்னேஷ் சிவன் பாடல்கள் எழுதிய நிலையில் தற்போது மீண்டும் ’எஸ்.கே 20’ படத்திலும் ஒரு பாடலை எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

மத்திய அரசை விமர்சித்து பாடல்: கமல் மீது காவல்துறை ஆணையத்தில் புகார்

கமல்ஹாசனின் 'விக்ரம் 'படத்தின் 'பத்தல பத்தல' பாடல் நேற்று வெளியான நிலையில் இந்த பாடலில் ஒன்றிய அரசு என்று இருந்த வரிகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் தற்போது

'தலைவர் 169' படத்தில் நடிப்பது உண்மையா? சிவகார்த்திகேயன் விளக்கம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க இருக்கும் 'தலைவர் 169' திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருப்பதாகவும் அது மட்டுமின்றி ஒரு பாடல் எழுத இருப்பதாகவும் தகவல்கள்

'தவறான தகவல்': 'தளபதி 66' செய்தி குறித்து மனோபாலா டுவிட்!

'தளபதி 66' படத்தின் செய்தி குறித்த தகவல் சமூக வலைதளங்களில் கசிந்து வந்த நிலையில் இந்த தகவல் தவறானது என மனோபாலா தனது ட்விட்டர் பக்கத்தில் தெளிவுபடுத்தியுள்ளார்.

'பத்தல பத்தல' பாடலுக்கு செம ஆட்டம் ஆடும் பிக்பாஸ் பிரபலங்கள்!

கமல்ஹாசன் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையில் உருவாகியுள்ள 'விக்ரம்' திரைப்படம் ஜூன் மூன்றாம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தில் இடம்பெற்ற

சினிமாவுக்கு வரும் ஜெயராம் குடும்பத்தின் 4வது நபர்: குவியும் வாழ்த்துக்கள்

பிரபல மலையாள நடிகர் ஜெயராமின் குடும்பத்தில் ஏற்கனவே மூன்று பேர் சினிமாவில் நடித்துள்ள தற்போது நான்காவது நபரும் சினிமாவில் நடிக்க வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.