close
Choose your channels

சூரி வீட்டு விசேஷத்திற்கு சென்ற விஜய்சேதுபதி-சிவகார்த்திகேயன்!

Friday, September 10, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் திரையுலகின் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவரான சூரியின் வீட்டில் நடந்த விசேஷம் ஒன்றுக்கு தமிழ் திரையுலகின் பிரபல நடிகர்களான விஜய் சேதுபதி மற்றும் சிவகார்த்திகேயன் கலந்து கொண்ட தகவல் தற்போது கிடைத்துள்ளது.

நடிகர் சூரியின் அண்ணன் மகள் சுஷ்மிதா திருமணம் இன்று மதுரையில் நடந்தது. சுஷ்மிதா - ராம்பிரசாத் திருமணத்திற்கு விஜய்சேதுபதி, சிவகார்த்திகேயன், கருணாஸ், புகழ், தங்கதுரை உள்பட பல நடிகர்கள் கலந்து கொண்டனர். நாம் தமிழர் கட்சியின் சீமான் அவர்களும் இந்த திருமணத்தில் கலந்து கொண்டு மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

நடிகர் சூரியின் கூட்டு குடும்பமாக இருப்பதால் எந்த ஒரு விசேஷம் என்றாலும் சூரியின் தலைமையில் தான் நடந்து வரும் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் சூரியின் அண்ணன் மகள் சுஷ்மிதாவின் திருமணமும் அவரது தலைமையில் நடந்து உள்ளது. இந்த திருமணத்தை சூரியை பிரமாண்டமாக நடத்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சூரி தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ’அண்ணாத்த’ சிவகார்த்திகேயன் நடித்து வரும் ’டான்’ மற்றும் ’வேலன்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார் என்பதும் இவை தவிர வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் ’விடுதலை’ என்ற திரைப்படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.