close
Choose your channels

தயாநிதி அழகிரிக்காக இணையும் விஜய்சேதுபதி-சிவகார்த்திகேயன்!

Tuesday, November 3, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அஜீத் நடித்த ’மங்காத்தா’ உள்பட ஒருசில திரைப்படங்களை தயாரித்த தயாநிதி அழகிரி இயக்குனர் அவதாரம் எடுத்துள்ளார் என்பதையும், அவர் இயக்கிய குறும்படத்திற்கு ’மாஸ்க்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாகவும் வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இயக்குனர் அவதாரம் எடுத்த தயாநிதி அழகிரிக்கு அனிருத், ஹரிஷ் கல்யாண், சாந்தனு, நிதின் சத்யா, சூரி உள்பட பலர் வாழ்த்து தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில் இந்த குறும்படத்தின் டீசர் நாளை காலை 10 மணிக்கு வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த டீசரை நடிகர்கள் சிவகார்த்திகேயன் மற்றும் விஜய்சேதுபதி இணைந்து தங்களுடைய டுவிட்டர் பக்கங்களில் வெளியிடவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே இந்த குறும்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை தயாநிதி அழகிரியின் சகோதரரும் நடிகருமான அருள்நிதி தனது டுவிட்டர் பக்கத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் ரிலீஸ் செய்தார் என்பது தெரிந்ததே.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.