close
Choose your channels

சிவகார்த்திகேயனின் 'அயலான்' புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு.. டீசர் எப்போது? சூப்பர் தகவல்..!

Saturday, September 23, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சிவகார்த்திகேயன் நடித்த ‘அயலான்’ திரைப்படம் தீபாவளி அன்று வெளியாகும் என கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அறிவிப்பு வெளியான நிலையில் தற்போது புதிய ரிலீஸ் தேதியை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

‘அயலான்’ படத்தின் கிராபிக்ஸ் காட்சிகளின் பணி இன்னும் முடிவடையவில்லை என்பதால் தீபாவளியை ‘அயலான்’ திரைப்படம் மிஸ் செய்துவிட்டது. அதற்கு பதிலாக நீண்ட இடைவெளி உள்ள பொங்கல் திருநாளை ‘அயலான்’ படக்குழுவினர் தேர்வு செய்துள்ளனர்.

‘அயலான்’ திரைப்படம் பொங்கல் திருநாளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து படக்குழுவினர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறிய போது ’எங்கள் ‘அயலான்’ திரைப்படத்தின் முழு திறனையும் அடைவதை உறுதி செய்வதே முதன்மையான குறிக்கோள். ரசிகர்களின் பார்வை அனுபவத்திற்காக படத்தின் தரத்தை மேம்படுத்த சில கூடுதல் நேரம் தேவைப்படுகிறது. காத்திருப்பதற்கு பலனளிக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்

இந்த படம் திரையரங்குகளில் கொண்டாட்டமாக இருக்கும். இதற்காக நீங்கள் இவ்வளவு நேரம் காத்திருக்கிறீர்கள், இன்னும் சில மாதங்கள் மட்டும் நாங்கள் கேட்கிறோம். உங்கள் அன்பிற்கு நன்றி செலுத்தும் விதமாக அக்டோபர் முதல் வாரத்தில் ‘அயலான்’ டீசரை வெளியிட நாங்கள் முடிவு செய்துள்ளோம். பொங்கல் தினத்தில் எங்களின் வருகையை வரவேற்க ஆவலோடு காத்திருக்கிறோம்’ என்று தெரிவித்துள்ளனர்.

சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரித்திசிங், இஷா கோபிகர், யோகி பாபு, கருணாகரன், உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஆஸ்கர் நாயகன் ஏஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். கேஜேஆர் ஸ்டுடியோஸ் மற்றும் 24 ஏஎம் ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் இந்த படத்தை தயாரித்து வருகின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.