'டாக்டர்' ரிலீஸ் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு!

  • IndiaGlitz, [Thursday,September 09 2021]

சிவகார்த்திகேயன் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள ’டாக்டர்’ திரைப்படம் ரிலீசுக்கு தயாராகி சில மாதங்கள் ஆகிவிட்ட நிலையில் இந்த படம் திரையரங்குகளில் வெளியாக வேண்டும் என்பதற்காகவே பல மாதங்கள் காத்து இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது திரையரங்குகள் திறக்கப்பட்டு புதிய திரைப்படம் ரிலீஸ் ஆகி கொண்டிருக்கும் நிலையில் விரைவில் ’டாக்டர்’ ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகும் என்று கூறப்பட்டது.

இந்த நிலையில் ’டாக்டர்’ திரைப்படம் ஓடிடியில் ரிலீசாக இருப்பதாகவும் அதற்கான ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டு விட்டதாகவும் கூறப்பட்டது. ஆனால் அவ்வப்போது இந்த தகவலை தயாரிப்பு நிறுவனம் மறுத்து வந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி ’டாக்டர்’ திரைப்படம் பெரிய திரையில் வெளியாவது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும், வரும் அக்டோபர் மாதம் ’டாக்டர்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என்றும் டாக்டர் படத்தின் தயாரிப்பு நிறுவனமான கேஜேஆர் ஸ்டூடியோஸ் தெரிவித்துள்ளது. இதனை அடுத்து சிவகார்த்திகேயன் ரசிகர்கள் குஷியில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சிவகார்த்திகேயன் ஜோடியாக பிரியங்கா அருள்மோகன் நடித்துள்ள இந்த படத்தில் வினய் வில்லனாக நடித்துள்ளார். மேலும் யோகி பாபு உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.