சிவகார்த்திகேயனின் 'டான்' ரிலீஸ் தேதி இதுவா?

சிவகார்த்திகேயன் நடித்த ’டாக்டர்’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் சிவகார்த்திகேயனின் திரையுலக வாழ்வில் 100 கோடி வசூல் செய்த முதல் படம் என்ற பெருமை இந்த படத்திற்கு கிடைத்தது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் ’டாக்டர்’ வெற்றியை அடுத்து சிவகார்த்திகேயன் நடித்து முடித்துள்ள திரைப்படம் ‘டான்’. இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிவடைந்த நிலையில் இந்த படம் பிப்ரவரி 14ஆம் தேதி காதலர் தினத்தில் வெளியாகும் என்று கூறப்பட்டது. ஆனால் தற்போது வந்துள்ள தகவலின்படி இந்த படம் மார்ச் 25ஆம் தேதி வெளியாக இருப்பதாகவும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

சிவகார்த்திகேயன், பிரியங்கா அருள்மோகன், ஷிவாங்கி, சமுத்திரக்கனி, எஸ் ஜே சூர்யா, பாலசரவணன், சூரி உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். சிபி சக்கரவர்த்தி இயக்கி உள்ள இந்த படத்தை லைக்கா மற்றும் சிவகார்த்திகேயன் புரோடக்சன் நிறுவனங்கள் இணைந்து தயாரித்து உள்ளன
 

More News

தனுஷ்-ஐஸ்வர்யா பிரிவை அடுத்து ரஜினிகாந்த் எடுத்த அதிரடி முடிவு!

சூப்பர் ஸ்டார் ரஜினியின் மகள் ஐஸ்வர்யா மற்றும் பிரபல நடிகர் தனுஷ் சமீபத்தில் பிரிவதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ரஜினிகாந்துக்கு இதுகுறித்து எடுத்துள்ள முடிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அந்தரத்தில் தலைகீழாக தொங்கியபடி யோகா: வரலட்சுமியின் வைரல் வீடியோ!

தமிழ் திரை உலகின் நடிகைகளில் ஒருவரான வரலட்சுமி சரத்குமார் அந்தரத்தில் தொங்கியவாறு யோகா செய்யும் வீடியோவை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள அந்த வீடியோ வைரலாகி வருகிறது. 

கமல்-சிவகார்த்திகேயன் படத்தில் இணைவது இந்த பிரபல நடிகையா?

சமீபத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கிராண்ட் ஃபினாலே நடந்தபோது கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனில் நிறுவனத்தின் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிப்பில் ஒரு திரைப்படம் உருவாக

மகள் பிறந்த நாளில் ரொமான்ஸ் போட்டோஷூட் எடுத்த சினேகா - பிரசன்னா தம்பதி! 

நடிகை சினேகா மற்றும் நடிகர் பிரசன்னா தம்பதியின் மகளான ஆத்யந்தாவின் பிறந்த நாள் கொண்டாடப்பட்ட நிலையில் இந்த பிறந்தநாளில் சினேகா மற்றும் பிரசன்னா எடுத்துக்கொண்ட ரொமான்ஸ்

காதல் கணவரை மணந்தார் 'நாகினி' நடிகை:  குவியும் வாழ்த்துக்கள்!

சன் டிவியில் ஒளிபரப்பான 'நாகினி' என்ற சீரியலில் நடித்த நடிகை மௌனி ராய் தனது காதலரை திருமணம் செய்துகொண்ட நிலையில் இது குறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகின்றன.