close
Choose your channels

ஆசைப்பட்டா மட்டும் பத்தாது, அடம்பிடிக்கணும்: 'கனா' டிரைலர் விமர்சனம்

Thursday, August 23, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சிவகார்த்திகேயன் தயாரிக்கும் முதல் படமான 'கனா' படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் இன்று வெளியாகவுள்ளது தெரிந்ததே. அந்த வகையில் சற்றுமுன் 'கனா' படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

ஒரு பெண் குழந்தைக்கு கிரிக்கெட் செட் ஆகாது என்று அனைவரும் கூறியபோதிலும் தன்னுடைய ஆசையை நிறைவேற்ற கடுமையாக உழைக்கும் ஒரு பெண்ணின் கதைதான் இந்த 'கனா.

மகள் ஐஸ்வர்யா ராஜேஷ் கிரிக்கெட் கனவை நிறைவேற்ற உறுதுணையாக இருக்கும் தந்தை கேரக்டரில் சத்யராஜ் நடித்துள்ளார். 'நம்மல மாதிரி ஊருல பொம்பள பிள்ளைங்க கிரிக்கெட் விளையாடி பார்த்திருக்கிங்களா?

என்ற வசனத்துடன் ஆரம்பமாகும் இந்த படத்தின் டீசர் அடுத்த காட்சியிலேயே ஒரு பெண் குழந்தை ஆசையுடன் கிரிக்கெட் பந்தை கையில் வைத்திருப்பது போல் உள்ளது.

ஆசைப்பட்டா மட்டும் பத்தாது அடம்பிடிக்க தெரியணும் என்ற வசனம் இந்த படத்தின் வலுவான வசனங்களில் ஒன்றாக இருக்கும் என தெரிகிறது. ஐஸ்வர்யா ராஜேஷின் கண்களில் உள்ள வெறியை பார்க்கும்போது இயக்குனர் அருண்காமராஜ் அவரை மிக அருமையாக பயன்படுத்தியுள்ளார் என்பது தெரிகிறது. டிரைலரின் இறுதியில் சிவகார்த்திகேயன் வித்தியாசமான கெட்டப்பில் தோன்றுவது இந்த டிரைலரின் ஹைலைட். மொத்தத்தில் இந்த டிரைலர் படத்தை உடனே பார்க்க வேண்டும் என்ற ஆவலை தூண்டுகிறது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.