மார்ச் 20ல் வெளியாகிறது சிவகார்த்திகேயன் படம்

  • IndiaGlitz, [Saturday,March 07 2020]

சிவகார்த்திகேயன் நடிப்பில் இயக்குனர் பிஎஸ் மித்ரன் இயக்கிய ’ஹீரோ’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து அவர் தற்போது ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடித்து வருகிறார். ‘இன்று நேற்று நாளை’ இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ‘அயலான்’ என்ற படத்திலும் கோலமாவு கோகிலா பட இயக்குனர் நெல்சன் இயக்கி வரும் ‘டாக்டர் திரைப்படத்திலும் நடித்து வருகிறார். இந்த 2 படங்களின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சிவகார்த்திகேயன் நடித்த ’ஹீரோ’ திரைப்படத்தின் தெலுங்கு டப்பிங் பணிகள் கடந்த சில வாரங்களாக நடைபெற்று வந்த நிலையில் இந்த படம் தற்போது ரிலீசுக்கு தயாராகிவிட்டது. ‘ஷக்தி’ என்ற டைட்டிலில் தெலுங்கில் டப் செய்யப்பட்ட இந்த படம் மார்ச் மாதம் 20ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது

தமிழைப் போலவே தெலுங்கிலும் இந்த படம் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே பிஎஸ் மித்ரன் இயக்கிய முதல் படமான ’இரும்புத்திரை’ திரைப்படம் தெலுங்கில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது

More News

'தனுஷ் 43' படம் குறித்த அசத்தலான தகவல் அளித்த ஜிவி பிரகாஷ்

தனுஷ் நடித்த 'அசுரன்' மற்றும் 'பட்டாஸ்' ஆகிய இரண்டு திரைப்படங்களும் சமீபத்தில் வெளிவந்து நல்ல வெற்றியைப் பெற்றதையடுத்து தற்போது அவர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய'ஜெகமே தந்திரம்'

மோசடி குற்றவாளியை கண்டுபிடிப்போம்: அஜித் வெளியிட்ட அதிரடி அறிக்கை

நடிகர் அஜித், மீண்டும் சமூக வலைத்தளங்களில் இணையவிருப்பதாக அவருடைய போலியான கையெழுத்துடன் ஒரு பதிவு இணையதளத்தை பரபரப்பாக்கியது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

'இந்தியன் 2' படப்பிடிப்பில் மீண்டும் சிக்கல்? பரபரப்பு தகவல்

கமலஹாசன் நடிப்பில் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வந்த 'இந்தியன் 2'படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்தது.

Oppo களமிறக்கும் புதிய Find சீரிஸ் மொபைல்கள்.. என்னென்ன specifications தெரியுமா..?!

பின்பக்கம் மூன்று கேமரா 48,48,13 மெகாபிக்ஸல் என உள்ளது. 4260mAh பேட்டரியானது கொடுக்கப்பட்டுள்ளது.

கப்பலில் கொரோனா பயணிகள்... சிகிச்சைக்கு அமெரிக்காவில் அனுமதி மறுக்கும் ட்ரம்ப்..!

"அமெரிக்காவில் கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பவர்களின் எண்ணிக்கை ஒரு கப்பலால் இரட்டிப்பாக நான் விரும்பவில்லை" என தெரிவித்திருந்தார்.