'அயலான்' சென்சார் செய்த அதிகாரிகளுக்கு ஆச்சரியம்.. ரன்னிங் டைம் எவ்வளவு?

  • IndiaGlitz, [Tuesday,January 09 2024]

கடந்த சில ஆண்டுகளாக தயாரிக்கப்படும் தமிழ் திரைப்படங்கள் அனைத்துமே சென்சாரில் கிட்டத்தட்ட ’யுஏ’ சான்றிதழ் பெற்று வருகிறது என்பதும் சில படங்களுக்கு ‘ஏ’ சான்றிதழ் கூட வழங்கப்பட்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. எப்போதாவது அத்திப்பூத்தாற்போல்தான் சில தமிழ் படங்களுக்கு ’யூ’ சான்றிதழ் கிடைத்து வருகிறது.

இந்த நிலையில் சிவகார்த்திகேயன் நடித்த 'அயலான்’ திரைப்படத்தின் சென்சார் தகவல் தற்போது வந்துள்ள நிலையில் இந்த படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகள் ஒரு காட்சியை கூட கட் செய்யவில்லை என்றும் இதனை அடுத்து முழுமையாக படத்தை சென்சார் செய்து படத்துக்கு ’யூ’ சான்றிதழ் கொடுத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் இந்த திரைப்படத்தின் ரன்னிங் டைம் 2 மணி நேரம் 35 நிமிடங்கள் என்றும் அதாவது 155 நிமிடங்கள் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. சிவகார்த்திகேயன் நடித்த பெரும்பாலான திரைப்படங்கள் ’யூ’ சான்றிதழ் பெற்று வருகிறது என்பதும் அதனால்தான் அவருக்கு குழந்தைகளின் ரசிகர்கள் அதிகம் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் தனது படத்தில் சிகரெட், மது குடிக்கும் காட்சிகளை கூட சிவகார்த்திகேயன் தவிர்த்து வருகிறார் என்றும் அதிகப்படியான வன்முறை, கெட்ட வார்த்தை வசனம் உள்ளிட்ட எதுவுமே இல்லாததால் அவரது படங்களுக்கு தொடர்ச்சியாக ’யூ’ சான்றிதழ் கிடைத்து வருகிறது என்றும் அவர் ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரித்திசிங், இஷா கோபிகர், யோகி பாபு, கருணாகரன், உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஆஸ்கர் நாயகன் ஏஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். கேஜேஆர் ஸ்டுடியோஸ் மற்றும் 24 ஏஎம் ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் இந்த படத்தை தயாரித்து வருகின்றன.
 

More News

திரையுலகில் மேலும் ஒரு நட்சத்திர ஜோடி.. விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா திருமணமா?

திரை உலகில் ஏராளமான நட்சத்திர ஜோடிகள் சேர்ந்துள்ள நிலையில் தற்போது மேலும் ஒரு ஜோடியாக  விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா இருவரும் திருமணம் செய்ய போவதாகவும்

எது எது எங்கே போய் சேரணுமோ, அது அது அங்கே போய் சேருகிறது.. பிக்பாஸ் வீட்டுக்கு வந்த அனன்யா..!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் கடைசி வாரத்தின் எபிசோடுகள் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் நிலையில் இந்த வாரம் ஏற்கனவே எலிமினேஷன் ஆன போட்டியாளர்கள்  மீண்டும் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.

'கேப்டன் மில்லருக்கு பிறகு 3 படங்கள்.. அருண் மாதேஸ்வரனின் அடுத்தடுத்த புரொஜக்ட்கள் என்னென்ன?

 தனுஷ் நடிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவான 'கேப்டன் மில்லர்' என்ற திரைப்படம் வரும் 12ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில், அருண் மாதேஸ்வரன் இயக்கும் அடுத்தடுத்த புரொஜக்ட்கள்

'லியோ' படத்திற்கு கிடைத்த ஒத்துழைப்பு.. அரசுக்கு 2 மாதம் கழித்து நன்றி சொன்ன தயாரிப்பாளர்..!

தளபதி விஜய் நடித்த 'லியோ' திரைப்படம் கடந்த ஆண்டு தீபாவளி தினத்தில் வெளியான நிலையில் இரண்டு மாதம் கழித்து தற்போது இந்த படத்தின் தயாரிப்பாளர் தனது சமூக வலைத்தளத்தில் இந்த படத்திற்கு

விசித்ராவுக்கு வைக்கப்பட்ட வெல்கம் பார்ட்டி.. டைட்டில் வின்னர் பங்கேற்பு..!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் 95 நாட்களுக்கும் மேலாக விளையாடி சாதனை செய்த விசித்ராவுக்கு வெல்கம் பார்ட்டி வைக்கப்பட்ட நிலையில் இந்த பார்ட்டியில் பிக் பாஸ் சீசன் 2 டைட்டில் வின்னர் ரித்விகா கலந்து கொண்ட