சிவகார்த்திகேயனின் 'டாக்டர்' படத்தின் அடுத்த அட்டகாசமான அறிவிப்பு!

  • IndiaGlitz, [Tuesday,December 03 2019]

சிவகார்த்திகேயன் நடித்த ’ஹீரோ’ திரைப்படம் விரைவில் திரைக்கு வர உள்ள நிலையில் அவர் தற்போது ’இன்று நேற்று நாளை’ இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் சிவகார்த்திகேயன் நடிக்கும் அடுத்த படத்தின் அறிவிப்பு நேற்று வெளிவந்தது என்பதும் ’டாக்டர்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தை கோலமாவு கோகிலா நெல்சன் இயக்கவிருக்கிறார் என்பதையும் இந்த படத்திற்கு இளம் இசை புகழ் அனிருத் இசையமைக்க உள்ளார் என்பதையும் பார்த்தோம்.

இந்த நிலையில் சிவகார்த்திகேயனின் டாக்டர் திரைப்படத்தின் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இந்த படத்திற்கு விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்ய இருப்பதாகவும், நிர்மல் படத்தொகுப்பு பணியில் ஈடுபட இருப்பதாகவும், கிரண் கலை இயக்குனராகவும், அன்பறிவ் சண்டை பயிற்சி இயக்குனராகவும், பல்லவி சிங் காஸ்டியூம் டிசைனராக பணி புரிவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்கும் நடிகை மற்றும் இந்த படத்தில் நடிக்கும் மற்ற நட்சத்திரங்கள் குறித்த அறிவிப்பு ஒருசில நாட்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சிவகார்த்திகேயனின் எஸ்கேப் புரடொக்சன்ஸ் மற்றும் கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

நாடாளுமன்றத்தில் "Propose" செய்த எம்.பி..!

இத்தாலி நாட்டில் எம்பி ஒருவர் பாராளுமன்ற கூட்டம் நடைபெற்று கொண்டிருக்கும் போதே, தனது தோழியிடம் காதலை கூறிய சம்பவம் உலக அளவில் பிரபலமாகியுள்ளது...

ரஜினியுடன் விஜய் பட இயக்குனர் சந்திப்பு: அடுத்த படத்தை இயக்குகிறாரா?

தமிழ் திரையுலகில் ஒரே ஒரு சூப்பர் ஹிட் படத்தை கொடுத்து விட்டால் அதன் பின்னர் உச்சத்துக்குச் சென்று விடலாம் என்பது இன்றைய இளைய தலைமுறை இயக்குநர்களின் நிலையாக உள்ளது 

செல்போனில் மூழ்கிய தாய், மாடியில் இருந்து விழுந்த ஒன்றரை வயது குழந்தை: சென்னையில் பயங்கரம்

பெற்றோர்களின் கவனக்குறைவால் குழந்தைகள் பலியாகி வரும் சம்பவங்கள் அதிகரித்து வருவது பெரும் கவலைக்குரியதாக உள்ளது.

அமேசான் காட்டுக்கு தீ வைத்தது நானா? அதிபரின் குற்றச்சாட்டுக்கு பிரபல நடிகர் மறுப்பு!

உலகில் உற்பத்தியாகும் 30 சதவீத ஆக்ஸிஜன், அமேசான் காட்டில் தான் உற்பத்தி ஆவதாக ஒரு செய்தி வெளியாகிய நிலையில் அந்த அமேசான் காடுகளில் உள்ள மரங்களை அழிக்கும் நோக்கில்

நடுக்காட்டில் பல நாட்களாக தூக்கில் தொங்கிய காதல் ஜோடியின் பிணங்கள்: அதிர்ச்சி தகவல்

அடர்ந்த காட்டுப்பகுதியில் காதல் ஜோடி ஒன்றின் பிணங்களை போலீசார் பல நாட்களுக்கு பிறகு அழுகிய நிலையில் கண்டுபிடித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது