சிவகார்த்திகேயனின் 'டான்' வசூல்: தமிழ் சினிமா இதுவரை செய்யாத சாதனை!

  • IndiaGlitz, [Friday,September 02 2022]

தமிழ் சினிமாவில் இதுவரை எந்த படமும் செய்யாத வசூல் சாதனையை சிவகார்த்திகேயன் நடிப்பில் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் உருவான ’டான்’ படத்தின் வசூல் சாதனை செய்துள்ளது என்ற தகவல் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிவகார்த்திகேயன் நடித்த ’டான்’ திரைப்படம் கடந்த மே 13ஆம் தேதி வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்றது என்பதும் இந்த படம் ஒரு சில நாட்களில் 100 கோடி வசூலைத் தாண்டியது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் இந்த படத்தின் மொத்த வசூல் 130 கோடி என தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ரஜினி, கமல், விஜய், அஜித் போன்ற பெரிய நடிகர்கள் நடித்த பல திரைப்படங்கள் 100 கோடி முதல் 400 கோடி வரை வசூல் செய்து இருந்தாலும் ‘டான்’ திரைப்படத்தின் ரூ.130 கோடி வசூல் என்பது இதுவரை தமிழ் சினிமாவில் எந்த படமும் செய்யாத ஒரு புதிய சாதனையை செய்துள்ளது.

அதாவது ஒரு அறிமுக இயக்குனரின் முதல் திரைப்படமே 100 கோடி ரூபாய் வசூல் செய்தது ‘டான்’ திரைப்படம் தான் என்பதுதான் அந்த சாதனை. இந்த சாதனைக்கு பரிசாக இயக்குனர் சிபிசக்கரவர்த்திக்கு அடுத்த படமே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ’தலைவர் 170’ என்ற படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது என்பதும் இந்த படத்தையும் ‘டான்’ திரைப்படத்தை தயாரித்த லைகா நிறுவனமே தயாரிக்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் ரூ.75 மட்டுமே டிக்கெட் கட்டணம்: அதிரடி அறிவிப்பு!

மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் 75 ரூபாய் மட்டுமே டிக்கெட் கட்டணம் என அதிரடியாக அறிவிக்கப்பட்டுள்ளது சினிமா ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

விஷ்ணு விஷால் -செல்வராகவன் இணையும் படத்தின் மாஸ் மோஷன் போஸ்டர்!

தமிழ் திரை உலகின் இளையதலைமுறை நடிகர்களில் ஒருவரான விஷ்ணு விஷால் நடிக்கும் அடுத்த திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி உள்ள நிலையில் இந்த மோஷன் போஸ்டர் தற்போது இணையதளங்களில்

ஒரே படத்தில் சூர்யா, மகேஷ்பாபு, அமிதாப், துல்கர் சல்மான்? ஆச்சரியத்தில் ரசிகர்கள்!

 ஒரே திரைப்படத்தில் சூர்யா, மகேஷ்பாபு, அமிதாப்பச்சன், மற்றும் துல்கர் சல்மான் ஆகிய நால்வரும் சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.

நடிகை சமந்தா மோடி ஆதரவாளரா? அவரே பேசிய வீடியோ வைரல்!

தமிழ் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா, தான் ஒரு மோடி ஆதரவாளர் என அவரே பேசிய வீடியோ திடீரென இணையதளங்களில் வைரலாகி வருகிறது. 

புகழ்-பென்சியா திருமணம்: 2 நிமிட செம வீடியோ வைரல்!

விஜய் டிவியில் ஒளிபரப்பான 'குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த புகழ் தற்போது திரையுலகிலும் பல திரைப்படங்களில் நடித்து வருகிறார் என்பதும் தெரிந்ததே.