சிவகார்த்திகேயனின் 'டான்' ரிலீஸ் எப்போது? ஆச்சரிய தகவல்!

  • IndiaGlitz, [Sunday,September 12 2021]

சிவகார்த்திகேயன் நடித்து முடித்துள்ள ’டாக்டர்’ திரைப்படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது என்பதும் இந்த படம் திரையரங்குகளில் தான் ரிலீஸாகும் என பட தயாரிப்பாளர் சமீபத்தில் உறுதி செய்தார் என்பதும் தெரிந்ததே. இந்த படம் அக்டோபர் முதல் வாரம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் சிவகார்த்திகேயன் ’அயலான்’ மற்றும் ’டான்’ ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார் என்பதும் ’இன்று நேற்று நாளை’ இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ’அயலான்’ படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் சிபி சக்கரவர்த்தி என்பவர் இயக்கத்தில் உருவாகி வரும் ’டான்’ படத்தின் படப்பிடிப்பு இன்னும் 10 முதல் 15 நாட்கள் வரை மட்டுமே பாக்கி இருப்பதாகவும் அதுவும் இம்மாதத்திற்குள் முடிந்துவிடும் என்றும் கூறப்படுகிறது. இதனை அடுத்து இந்த திரைப்படம் வரும் டிசம்பர் அல்லது ஜனவரி வெளியாக அதிக வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

சிவகார்த்திகேயன் மற்றும் லைக்கா நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன், பிரியங்கா அருள்மோகன், எஸ்ஜே சூர்யா, சமுத்திரக்கனி, சூரி, பாலசரவணன் காளி வெங்கட், ஷிவாங்கி உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.