close
Choose your channels

சிவகார்த்திகேயனின் 'ஹீரோ' படத்தின் அசத்தலான அப்டேட்!

Wednesday, October 23, 2019 • தமிழ் Comments

சிவகார்த்திகேயன் நடித்த 'நம்ம வீட்டு பிள்ளை' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய ஹிட்டான நிலையில் தற்போது அவர் 'இரும்புத்திரை' இயக்குனர் பி.எஸ். மித்ரன் இயக்கி வரும் ஹீரோ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார் என்பது தெரிந்ததே. இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படம் வரும் டிசம்பரில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது

இந்த நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட்லுக் ஆகியவை சமீபத்தில் வெளிவந்து சிவகார்த்திகேயன் ரசிகர்களை கவர்ந்த நிலையில் தற்போது அடுத்தகட்டமாக இந்த படத்தின் டீசர் ரிலீஸ் தேதி குறித்த அசத்தலான அப்டேட் வெளிவந்துள்ளது. இந்த படத்தின் டீசர் நாளை அதாவது அக்டோபர் 24ஆம் தேதி வெளியாகும் என இந்த படத்தின் இயக்குனர் பி.எஸ்.மித்ரன் தனது சமூக வலைத்தளத்தில் அறிவித்துள்ளார்.

சிவகார்த்திகேயன், அர்ஜூன், கல்யாணி பிரியதர்ஷன், இவானா உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவில், ரூபன் படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படத்தை கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது

Get Breaking News Alerts From IndiaGlitz