சிவகார்த்திகேயன் படத்தின் சிறப்பான தரமான அப்டேட்!

  • IndiaGlitz, [Saturday,July 27 2019]

சிவகார்த்திகேயன் நடித்த 'மிஸ்டர் லோக்கல்' என்ற திரைப்படம் இந்த ஆண்டு வெளியாகிய நிலையில் தற்போது அவர் ஒரே நேரத்தில் 4 படங்களில் நடிக்க கமிட்டாகியுள்ளார். இதில் இரண்டு படங்களின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கி விட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளது

'இன்று நேற்று நாளை' இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் ஒரு படம், 'இரும்புத்திரை' இயக்குநர் மித்ரன் இயக்கத்தில் ஒரு படம், பாண்டிராஜ் இயக்கத்தில் ஒரு படம், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஒரு படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் இயக்குனர் பிஎஸ் மித்திரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் படத்தின் டைட்டில் 'ஹீரோ' என்று வைக்கப்பட்டுள்ளது என்பது தெரிந்ததே. இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இன்று மாலை இந்த படத்தின் அப்டேட் ஒன்று வெளியாக இருப்பதாக இயக்குனர் மித்ரன் அறிவித்துள்ளார். அதாவது சிவகார்த்திகேயனின் 'ஹீரோ' படத்தின் டைட்டில் டிசைன் மற்றும் ரிலீஸ் தேதி இன்று அறிவிக்கப்படும் என்றும், அப்டேட் கேட்கும் நல்ல உள்ளங்களுக்கு இன்று மாலை 5 மணிக்கு சிறப்பான தரமான அப்டேட் இருப்பதாகவும் பிஎஸ் மித்ரன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து சிவகார்த்திகேயன் ரசிகர்கள் மாலை 5 மணியை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்