உன் லெவலுக்குத்தான் வாலாட்டனும்: Mr.லோக்கல் டீசர் விமர்சனம்

  • IndiaGlitz, [Sunday,February 17 2019]

சிவகார்த்திகேயன், நயன்தாரா நடிப்பில் ராஜேஷ் எம் இயக்கிய 'Mr.லோக்கல்; திரைப்படத்தின் டீசர் சற்றுமுன் வெளியாகியுள்ளது.

என் பேர் மனோகர், செல்லமா Mr.லோக்கல்ன்னு கூப்பிடுவாங்க என்ற சிவகார்த்திகேயன் அறிமுகத்துடனும் ஒரு அதிரடி ஸ்டண்ட் காட்சியுடனும் டீசர் ஆரம்பிக்கின்றது. கீர்த்தனா வாசுதேவன் என்ற கேரக்டரில் ஒரு நிறுவனத்தின் சி.இ.ஓ கேரக்டரில் நடித்திருக்கும் நாயகி நயன்தாராவுக்கு கெத்தான ரோல் என்பது டீசரில் இருந்து தெரிய வருகிறது.

லோக்கல் பசங்களை சுத்தமாக பிடிக்காத நயன்தாராவுக்கும் பக்கா லோக்கல் சிவகார்த்திகேயனுக்கும் இடையே நடக்கும் மோதல் அதன்பின் காதல் என்பதுதான் இந்த படத்தின் கதையாக இருக்கும்

ராஜேஷ் எம், முந்தய படங்களை போல் ஹீரோ, ஹீரோயின் மோதல், காதல், காமெடியுடன் வெளிநாட்டு குளுகுளு காட்சிகளும் இந்த படத்தில் உள்ளது. சந்தானம் இடத்தை யோகிபாபு மற்றும் சதீஷ் நிரப்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஹிப்ஹாப் தமிழா ஆதியின் பாடல்கள், இசை வழக்கம்போல் உள்ளது.

மொத்தத்தில் ஒரு படுஜாலியான படம் ஒன்று சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்காக காத்திருக்கின்றது என்பது டீசரில் இருந்து தெரிகிறது.

More News

கல்லூரி வளாகத்தில் பீர்பாட்டிலுடன் குத்தாட்டம் போட்ட மாணவிகள்: வைரலாகும் வீடியோ

ஒடிசா மாநிலத்தில் புரி பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் மாணவிகள் கையில் பீர் பாட்டிலுடன் குத்தாட்டம் போட்ட வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

காஷ்மீர் தாக்குதலின் பதிலடிக்கு ஆதரவு அளிப்போம்: நடிகர் சங்கம் அறிக்கை

காஷ்மீர் புல்வாமாவில் ராணுவ வீரர்கள் மீது பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த தீவிரவாத அமைப்பு ஒன்று நடத்திய காட்டுமிராண்டித்தனமான தீவிரவாத தாக்குதலுக்கு சி.ஆர்.பி.எப் வீரர்கள் 44 பேர் வீரமரணம் அடைந்தனர்.

விஷாலின் 48 மணி நேர சாதனை

விஷால், ராசிகண்ணா நடிப்பில் ஏஆர் முருகதாஸின் உதவியாளர் வெங்கட் மோகன் இயக்கி வரும் 'அயோக்யா' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது.

பாகிஸ்தானுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த சித்துவுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி

காஷ்மீரில் பாகிஸ்தானை சேர்ந்த தீவிரவாத அமைப்பு ஒன்று நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 44 சி.ஆர்.பி.எப் வீர்ர்கள் பலியான சம்பவம் ஒட்டுமொத்த இந்தியர்களையே அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

ரஜினி படத்தை பயன்படுத்தி மீம் போட்ட ஆஸ்திரேலியா போலீஸ்

ஆஸ்திரேலியா காவல்துறையும் ரஜினியின் படத்தை பயன்படுத்தி ஒரு விழிப்புணர்வு மீம் ஒன்றை தங்களது சமூகவலைத்தள பக்கத்தில் பதிவு செய்துள்ளது.