close
Choose your channels

ஒவ்வொரு தடவையும் ஜெயிக்கணும்: 'நம்ம வீட்டுப்பிள்ளை' டிரைலர் விமர்சனம்

Saturday, September 14, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சிவகார்த்திகேயன் நடிப்பில் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கிய ‘நம்ம வீட்டுப்பிள்ளை’ திரைப்படத்தின் டிரைலர் சற்றுமுன் வெளியாகி இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

‘நம்மள மாதிரி பசங்க ஒரு தடவை ஜெயிச்சா விட்ர மாட்டாங்க, ஒவ்வொரு தடவையும் ஜெயிக்கணும், ஜெயிப்போம்’ என்ற சிவகார்த்திகேயன் வசனத்துடன் இந்த டிரைலர் ஆரம்பமாகிறது. ’பாசமலர்’ படத்திற்கு பின் அண்ணன் தங்கை பாசத்தை பொழியும் படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படும் இந்த படத்தில் ‘என் தங்கச்சிக்கு அப்படி ஒரு மாப்பிள்ளையை பார்க்க்ணும், நின்னா அப்படி இருக்கணும், நடந்தா இப்படி இருக்கணும்’ என்ற வசனம் அண்ணன் தங்கை பாசத்தை வெளிப்படுத்தும் காட்சிகளில் ஒன்று.

அனு இமானுவேலுடன் ரொமான்ஸ், சூரியுடன் காமெடி, கலர் கலரான கிராமத்து விழா நிகழ்ச்சிகள், பாரதிராஜாவின் செண்டிமெண்ட் காட்சிகள் வேல ராமமூர்த்தியின் வில்லத்தனம், ஆகியவை இந்த படத்தின் ஹைலைட்டுக்களாக இருக்குமென டிரைலரில் இருந்து தெரிகிறது.

‘சொந்தம் மாதிரி யாராலும் சந்தோஷப்படுத்தவும் முடியாது, சொந்தம் மாதிரி யாராவது கஷ்டப்படுத்தவும் முடியாது’ என்ற வசனம் சொந்தபந்தங்களின் உண்மை நிலையை காட்டுகிறது. மேலும் சேவல் சண்டைக்காட்சி, காளையுடன் மோதல், அதிரடி ஆக்சன் காட்சிகள் ஆகிய கமர்ஷியல் அம்சங்களும் படத்தில் இடம்பெற தவறவில்லை.

டி.இமானின் அமர்க்களமான பின்னணி இசை மற்றும் ஏற்கனவே ஹிட்டான பாடல்கள், நீரவ் ஷாவின் கலர்ஃபுல் ஒளிப்பதிவு, பாண்டிராஜின் அழுத்தமான வசனங்கள் மற்றும் நெகிழ்ச்சியான காட்சி அமைப்புகள் ஆகியவை நிச்சயம் இந்த படத்தை வெற்றிப்பாதைக்கு அழைத்து செல்லும் என்றே தெரிகிறது
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.