close
Choose your channels

சிவகார்த்திகேயனின் 'பிரின்ஸ்' : சென்சார் மற்றும் ரன்னிங் டைமின் அதிகாரபூர்வ தகவல்!

Wednesday, October 12, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சிவகார்த்திகேயன் நடித்த ‘பிரின்ஸ்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து சமீபத்தில் தொழில்நுட்ப பணிகள் முழுமையாக முடிவடைந்ததாக தகவல் வெளியானது. மேலும் இந்த படம் அக்டோபர் 21ஆம் தேதி வெள்ளிக்கிழமை ரிலீஸாக இருப்பதாக சமீபத்தில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் தற்போது ‘பிரின்ஸ்’ வரை படத்தின் சென்சார் மற்றும் ரன்னிங் டைம் குறித்த தகவல்களை படக்குழுவினர் அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளனர். ‘பிரின்ஸ்’ திரைப்படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகள் இந்த படத்திற்கு 'யு’ சான்றிதழ் கொடுத்துள்ளனர். சிவகார்த்திகேயனின் கிட்டத்தட்ட அனைத்து படங்களுமே 'யு’ சான்றிதழ் பெற்றுள்ள நிலையில் அந்த வரிசையில் ‘பிரின்ஸ்’ திரைப்படமும் 'யு’ சான்றிதழ் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த படத்தின் ரன்னிங் டைம் 2 மணி நேரம் 23 நிமிடங்கள் அதாவது 143 நிமிடங்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. சரியான ரன்னிங் டைமில் தீபாவளி விடுமுறை நாளில் வெளியாகும் இந்த படம் ’டாக்டர்’ ’டான்’ போல் வெற்றிப் படமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிவகார்த்திகேயன், மரியா, சத்யராஜ் உள்பட பலர் நடித்துள்ள இந்த படம் தமிழ் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் உருவாகியுள்ளது என்பதும் அனுதீப் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தை கோபுரம் பிலிம்ஸ் நிறுவனம் தமிழகத்தில் ரிலீஸ் செய்ய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.