'பிரின்ஸ்' ரிலீஸ் தேதி: அதிகாரபூர்வமாக அறிவித்த தயாரிப்பு நிறுவனம்!

  • IndiaGlitz, [Tuesday,October 04 2022]

சிவகார்த்திகேயன் நடித்து முடித்துள்ள 'பிரின்ஸ்’ திரைப்படம் வரும் தீபாவளி அன்று வெளியாகப் போவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது அதிகாரப்பூர்வமாக ரிலீஸ் தேதியை தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

சிவகார்த்திகேயன் நடிப்பில் அனுதீப் இயக்கத்தில் தமன் இசையில் உருவாகியுள்ள திரைப்படம் 'பிரின்ஸ்’. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் இந்த படம் தீபாவளி விருந்தாக வெளியாகிறது என கடந்த சில வாரங்களாக அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது இந்த படம் அக்டோபர் 21ஆம் தேதி வெள்ளிக்கிழமை ரிலீஸாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ரிலீஸ் தேதியுடன் கூடிய புதிய அட்டகாசமான போஸ்டரும் வெளியாகி உள்ள நிலையில் இந்த போஸ்டர் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த படத்தை கோபுரம் பிலிம்ஸ் நிறுவனம் தமிழகத்தில் ரிலீஸ் செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

'பொன்னியின் செல்வன்' நான்கு நாட்கள் வசூல்.. இந்த வாரத்திற்குள் ரூ.500 கோடியை எட்டுமா?

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவான 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் கடந்த மாதம் 30ஆம் தேதி வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது

பிக்பாஸ் நிகழ்ச்சியில் டாக் ஆஃப் தி போட்டியாளர் இவர்தான்: யாருமே எதிர்பார்க்காத சஸ்பென்ஸ்!

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி வரும் ஞாயிறன்று தொடங்கப்பட இருக்கும் நிலையில் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருக்கும் போட்டியாளர்களின் பெயர்கள் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கிரிக்கெட் வீரரா? செமையாய் களைகட்டும் போல?

விஜய் டிவியில் பிக்பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சி வரும் 9-ஆம் தேதி முதல் தொடங்க இருக்கும் நிலையில் இந்த சீசனை உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்க உள்ளார்.

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வண்ணம்: நவராத்திரியை நவரசமாக கொண்டாடும் அதிதி ஷங்கர்!

 நவராத்திரி விழா இந்தியா முழுவதும் 9 நாட்கள் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் இந்த நவராத்திரியின் முதல் நாளிலிருந்து ஒவ்வொரு நாளிலும் ஒவ்வொரு கலரில் வண்ண வண்ண ஆடை அணிந்து நடிகை அதிதி ஷங்கர்

'அழகே பொறாமைப்படும் அழகு': சினேகாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள்!

கடந்த 2000ம் ஆண்டுகளில் தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையாக இருந்த சினேகா, சமூக வலைதளங்களில் சமீபத்தில் வெளியிட்டுள்ள போட்டோஷூட் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.