தீபாவளி வின்னர் யார்? பிரின்ஸ் மற்றும் 'சர்தார்' முதல் நாள் வசூல் தகவல்கள்!

  • IndiaGlitz, [Saturday,October 22 2022]

இந்த ஆண்டு தீபாவளி தினத்தில் கமல், ரஜினி, அஜித், விஜய், சூர்யா ஆகிய முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் வெளியாகாத நிலையில் சிவகார்த்திகேயன் மற்றும் கார்த்தி படங்கள் வெளியாகியுள்ளன. இந்த இருவரில் தீபாவளி வின்னர் யார் என்பதை தற்போது பார்ப்போம்.

தீபாவளி விருந்தாக சிவகார்த்திகேயன் நடித்த ‘பிரின்ஸ் திரைப்படம் வெளியானது என்பதும் இந்தப் படம் மிகப் பெரிய எதிர்பார்ப்புடன் வெளிவந்த முதல் நாளே தமிழகத்தில் கலவையான விமர்சனங்கள் பெற்றுள்ளது. ஆனால் தெலுங்கு மாநிலங்களில் இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு என கூறப்படுகிறது.

அதேபோல் கார்த்தி நடித்த ’சர்தார்’ படத்தின் டீசர் மற்றும் டிரைலர் மிகப் பெரிய அளவில் வரவேற்பை பெற்று இருந்த நிலையில் நேற்றைய முதல் நாளில் இந்த படத்தை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இந்த நிலையில் சிவகார்த்திகேயனின் ‘பிரின்ஸ்’ திரைப்படம் நேற்று வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும் 6.50 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாகவும் தமிழகத்தில் மட்டும் 4.50 கோடி வசூல் செய்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதேபோல் கார்த்தியின் ‘சர்தார்’ திரைப்படம் நேற்று வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும் 8.00 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாகவும் தமிழகத்தில் மட்டும் 4 கோடி வசூல் செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது. முதல் நாள் வசூலை பொருத்தவரையில் ‘சர்தார்’ தீபாவளி வின்னராக கூறப்பட்டாலும் அடுத்தடுத்த நாட்களின் வசூல் எப்படி இருக்கின்றது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More News

அஜித்-விஜய்யை அடுத்து ரஜினி-ஷங்கர் மோதலா?

வரும் பொங்கல் தினத்தில் அஜீத்-விஜய் படங்கள் மோத உள்ளது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அடுத்த ஆண்டு தமிழ் புத்தாண்டு தினத்தில் ரஜினி மற்றும் ஷங்கர் படங்கள் மோத

அசீமுக்கு ரெட்கார்ட்? கமல் முன் கொந்தளித்த ஒட்டுமொத்த போட்டியாளர்கள்!

பிக் பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான அசீமுக்கு ஒட்டுமொத்த போட்டியாளர்களும் கமல் முன் ரெட் கார்டு கொடுக்கும் நிகழ்வின் வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

பிக்பாஸ் வீட்டில் இருந்து ஜிபி முத்து வெளியேறிவிட்டாரா? என்ன நடந்தது?

 பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலகலப்பான போட்டியாளர்களில் ஒருவரான ஜிபி முத்து திடீரென வீட்டை விட்டு வெளியே போக வேண்டும் என கூறிக் கொண்டிருந்த நிலையில் தற்போது அவர் வெளியேறிவிட்டதாக

விக்ரம்-பா ரஞ்சித் படம் குறித்த மாஸ் தகவலை கூறிய ஜிவி பிரகாஷ்!

விக்ரம் நடித்த 'கோப்ரா' மற்றும் 'பொன்னியின் செல்வன்' ஆகிய இரண்டு திரைப்படங்கள் அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.

'துணிவு' படத்தை முந்துகிறதா 'வாரிசு': புதிய ரிலீஸ் தேதி குறித்த தகவல்!

வரும் பொங்கல் விருந்தாக விஜய் நடிக்கும் 'வாரிசு' மற்றும் அஜித் நடிக்கும் 'துணிவு' ஆகிய இரண்டு திரைப்படங்கள் வெளியாக உள்ளது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளது.