சிவகார்த்திகேயன் அடுத்த பட வில்லன் இந்த பிரபல இயக்குனரா?

  • IndiaGlitz, [Friday,June 03 2022]

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த ’டாக்டர்’ மற்றும் ’டான்’ ஆகிய இரண்டு திரைப்படங்களும் அடுத்தடுத்து 100 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை செய்துள்ள நிலையில் தற்போது அவர் பிரபல தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் ’எஸ்கே 21’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்து விட்டது.

இந்த நிலையில் அடுத்ததாக கமல்ஹாசன் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் ’எஸ்கே 22’ படத்திலும், ‘மண்டேலா’ இயக்குனர் அஸ்வின் இயக்கத்தில் ’எஸ்கே 23’ படத்திலும் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளார்.

இந்த நிலையில் ’எஸ்கே 23’ திரைப்படம் நையாண்டி, அரசியல் கதையம்சம் கொண்ட படம் என்றும், இந்த படத்தில் இயக்குனர் மிஷ்கின் வில்லனாக நடிக்க வாய்ப்பு இருப்பதாகவும் இது குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது .

மேலும் இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை கியாரா அத்வானி நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேற்கண்ட தகவல்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 

More News

'தளபதி 67' படத்தின் நாயகி இவரா? விஜய்யுடன் 4வது முறையாக இணைகிறாரா?

 தளபதி விஜய்யுடன் ஏற்கனவே இரண்டு படங்களில் நடித்த நடிகை ஒருவர் 'தளபதி 67' படத்தின் நாயகி என்று கூறப்படுவதால் 4வது முறையாக விஜய்க்கு ஜோடியாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

'தளபதி 66' படப்பிடிப்பு குறித்த மாஸ் தகவல்!

தளபதி விஜய் நடித்து வரும் 'தளபதி 66' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது என்பதும் ஐதராபாத்தில் முதல்கட்ட படப்பிடிப்பு சில நாட்களுக்கு முன்னர் முடிந்தது என்பதும் தெரிந்ததே.

அட்லி-ஷாருக்கானின் 'ஜவான்' டீசர்: ரிலீஸ் தேதியும் அறிவிப்பு

பிரபல இயக்குனர் அட்லீயின் இயக்கத்தில், பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது என்பதை பார்த்தோம்.

சத்ரபதி சிவாஜி கேரக்டருக்கு இந்த நடிகர் தான் பொருத்தமாக இருப்பார்: ரசிகர்கள் கணிப்பு

மராட்டிய மன்னன் சத்ரபதி சிவாஜி கேரக்டருக்கு இந்த நடிகர் தான் பொருத்தமாக இருப்பார் என ரசிகர்கள் கணித்து அதுகுறித்த கற்பனையான புகைப்படத்தையும் பதிவு செய்துள்ள நிலையில்

'கைதி 2' ஆரம்பிக்கலாங்களா? லோகேஷிடம் தயாரிப்பாளர் கேள்வி!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், கமல்ஹாசன் நடிப்பில் உருவான 'விக்ரம்' திரைப்படம் இன்று வெளியாகி மிகப்பெரிய பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது.