'பராசக்தி' 'மதராஸி' இருக்கட்டும்.. சிவகார்த்திகேயனின் அடுத்த பட அறிவிப்பு இதோ..!


Send us your feedback to audioarticles@vaarta.com


சிவகார்த்திகேயன் நடித்து வரும் 'பராசக்தி' மற்றும் ‘மதராஸி’ ஆகிய இரண்டு படங்களின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், விரைவில் இந்த படங்கள் ரிலீஸ் ஆகும் என்பதும், 'அமரன்' என்ற மாபெரும் வெற்றி படத்திற்கு பின்னர் அடுத்தடுத்து இந்த இரண்டு படங்களும் வெற்றி பெற்றால், அவர் ஹாட்ரிக் வெற்றி பெறுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், ஒரு பக்கம் திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருந்தாலும், இன்னொரு பக்கம் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன் நிறுவனத்தின் பெயரில் சில படங்களை அவர் தயாரித்து வருகிறார் என்பது தெரிந்தது.
முதல் முறையாக அவர் 'கனா' என்ற திரைப்படத்தை தயாரித்தார். அதன் பின்னர் 'நெஞ்சமுண்டு நேர்மை ஒன்று ஓடு ராஜா', 'டாக்டர்', 'டான்', 'குரங்கு பெடல்', 'கொட்டுக்காளி' உள்ளிட்ட படங்களை தயாரித்துள்ளார்.
இந்நிலையில் தற்போது ரிலீசுக்கு தயாராக இருக்கும் 'ஹவுஸ் மேட்' என்ற படத்தை அவர் தனது நிறுவனத்தின் சார்பில் ரிலீஸ் செய்கிறார். இந்த படத்தில் 'கனா' நாயகன் தர்ஷன் முக்கிய இடத்தில் நடித்துள்ளார். காளி வெங்கட், வினோதினி உள்பட பலர் நடித்துள்ளனர்.
இயக்குநர் ராஜவேல் இயக்கத்தில், ராஜேஷ் முருகேசன் இசையில் உருவாகியுள்ள இந்த படம் முழுக்க முழுக்க காமெடி அம்சம் கொண்டது என்று கூறப்படுகிறது. இந்த படம் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன் நிறுவனத்திற்கு இன்னொரு வெற்றி படமாக அமையுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
#HouseMates - We watched it. We loved every bit of it. The unique concept, the entertainment and this new team’s sincere effort truly stood out and we knew we had to present it. @Siva_Kartikeyan @KalaiArasu_ @rajvel_hbk @Darshan_Offl @kaaliactor #ArshaBaiju @vinodhiniunoffl… pic.twitter.com/aA1ktL6T2Q
— Sivakarthikeyan Productions (@SKProdOffl) April 9, 2025
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments