பி.இ.EEE முடிச்சிட்டு மார்க்கெட்டிங் வேலை பாக்குறேன்: 'வாழ்' படத்தின் அசத்தலான டீசர்

  • IndiaGlitz, [Sunday,December 15 2019]

தமிழ் சினிமாவின் 100 ஆண்டுகால வரலாற்றில் இடம்பெறும் படங்களில் ஒன்றாக ‘அருவி’ இருக்கும் என பல விமர்சகர்கள் பாராட்டிய நிலையில் இந்த படத்தை இயக்கிய அருண்பிரபு புருஷோத்தமனின் அடுத்த படமான ‘வாழ்’ படத்தின் டீசர் சற்றுமுன் வெளியாகியுள்ளது.

’அருவி’ படம் போன்றே இதுவரை திரையில் காணாத இயற்கை எழில் காட்சிகள், போராட்டம், போலீஸ், வித்தியாசமான கதையம்சம், நேர்த்தியான காட்சி அமைப்பு ஆகியவை இந்த படத்திலும் உள்ளது என்பது டீசரில் இருந்து தெரிய வருகிறது.

நாயகியின் எண்ட்ரி, திருமணக்கோலத்தில் அவர் இருக்கும் காட்சி ஏதோ ஒரு சஸ்பென்ஸை சொல்லவிருப்பது போல் தெரிகிறது. ஹீரோ செய்யும் ஒரு செயல் குறித்து ‘நீயா நானா’வில் விவாதிக்கும் அளவுக்கு ஒரு பிரச்சனை என ‘அருவி’ பாணியிலேயே கதை செல்கிறது. ஷெல்லி காலிஸ்ட்டின் மிக அருமையான ஒளிப்பதிவு, பிரதீப் குமாரின் அட்டகாசமான பின்னணி இசை ஆகியவை இந்த படத்தின் பெரும் பிளஸ்கள் என்பது இந்த ஒரு நிமிட டீசரில் இருந்து தெரிகிறது.

ப்ரதீப் அந்தோணி, பானு, ஆரவ், தியா தவான், நித்யா, ச்ர்ஜா, இன்மொழி, ,மயூரா, பாபு உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை சிவகார்த்திகேயனின் எஸ்கே புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.