close
Choose your channels

சிவகார்த்திகேயனின் அடுத்த பட ரிலீஸ் தேதி அறிவிப்பு

Thursday, November 1, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சிவகார்த்திகேயன் தயாரித்து வரும் 'கனா' படம் குறித்த முக்கிய அறிவிப்பு இன்று மாலை 5.55 மணிக்கு வரும் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம். அந்த வகையில் சற்றுமுன் இதுகுறித்த அறிவிப்பை சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ளார்

இதன்படி 'கனா' திரைப்படம் டிசம்பர் மாதம் வெளியாகவுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சரியான ரிலீஸ் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிகிறது. எனவே இன்னும் ஒரு மாதத்தில் சிவகார்த்திகேயனை மீண்டும் திரையில் பார்க்கலாம் என்று வெளிவந்துள்ள இன்றைய அறிவிப்பால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

சிவகார்த்திகேயன் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ள இந்த படத்தில் சத்யராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ், தர்ஷன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். திபு நைனன் தாமஸ் என்பவர் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவும், ஆண்டனி எல் ரூபன் படத்தொகுப்பு பணியும் செய்துள்ளனர்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.