close
Choose your channels

ஜிப்ரானுடன் இணைந்து 'சிக்ஸர்' அடித்த சிவகார்த்திகேயன்!

Saturday, June 15, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர், தயாரிப்பாளர், பாடலாசிரியர், பாடகர் என பல அவதாரங்களில் ஜொலித்து வரும் கோலிவுட் நட்சத்திரங்களில் ஒருவர் சிவகார்த்திகேயன். இவர் தற்போது ஜிப்ரான் இசையமைத்து வரும் 'சிக்ஸர்' என்ற படத்திற்காக ஒரு பாடலை பாடியுள்ளார்.

இதுகுறித்து ஜிப்ரான் தனது சமூக வலைத்தளத்தில், 'சிக்ஸர்' படத்திற்காக சிவகார்த்திகேயன் பாடிய பாடல் ஒன்றை ரிகார்டிங் செய்தோம். மிக அருமையான இந்த பாடலை பாடிக்கொடுத்த சிவகார்த்திகேயனுக்கு நன்றி என்று ஜிப்ரான் தெரிவித்துள்ளார். 'நீ எங்கவேனா கோச்சிக்கினு' என்று தொடங்கும் இந்த பாடல் ஒரு கானா பாடல் என்பது குறிப்பிடத்தக்கது.

வைபவ் ரெட்டி, பல்லாக் லால்வானி, சதீஷ், ராதாரவி உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை சாச்சி என்பவர் இயக்கி வருகிறார். ஜிப்ரான் இசையில், பிஜி முத்தையா ஒளிப்பதிவில் ஜோமின் படத்தொகுப்பில் இந்த படம் வளர்ந்து வருகிறது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.