2ஆம் பாகமாகும் சிவகார்த்திகேயனின் சூப்பர் ஹிட் படம்: அதே இயக்குனர் அதே தயாரிப்பாளர்?

  • IndiaGlitz, [Thursday,October 14 2021]

சிவகார்த்திகேயன் நடித்த ’வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ மற்றும் ’ரெமோ’ ஆகிய இரண்டு படங்களில் ஒன்று இரண்டாம் பாகமாக உருவாக வாய்ப்பு இருப்பதாகவும் விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளிவரும் என்றும் கூறப்பட்டது. இந்த நிலையில் தற்போது வெளிவந்திருக்கும் தகவலின்படி சிவகார்த்திகேயனின் மற்றொரு சூப்பர் ஹிட் படமான ’ரஜினிமுருகன்’ திரைப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்து பேச்சுவார்த்தை தற்போது நடைபெற்று வருவதாகவும் விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளிவரும் வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது

கடந்த 2016ஆம் ஆண்டு வெளியான இந்த படத்தை பொன்ராம் இயக்கி இருந்தார் என்பதும் இந்த படத்தை லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. ரூபாய் 22 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட இந்த படம் ரூபாய் 51 கோடி வரை வசூல் செய்து மாபெரும் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் ’ரஜினி முருகன்’ படத்தின் இரண்டாம் பாகத்தை லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் பொன்ராம் இயக்க இருப்பதாகவும் இது குறித்த முறையான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது

இந்த நிலையில் சிவகார்த்திகேயன் நடித்த ’டாக்டர்’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றதை அடுத்து அவரது மார்க்கெட் கோலிவுட்டில் உச்சம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

வெள்ளேந்தியான தாமரை செல்வியிடம் இவ்வளவு திறமையா? இணையத்தில் வீடியோ வைரல்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவராகிய தாமரைச்செல்வியின் நாடக நடனம் குறித்த வீடியோக்கள் தற்போது திடீரென இணையதளங்களில் வைரலாகி வருவதை அடுத்து அவருக்கு

இன்று 'அரண்மனை 3' ரிலீஸ்: சுந்தர் சி, உதயநிதிக்கு டுவிட் செய்த ஆர்யா!

பிரபல இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள 'அரண்மனை 3' என்ற திரைப்படம் இன்று திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இசைவாணிக்கு திருமணமாகி விவாகரத்தும் ஆகிவிட்டதா? வைரல் புகைப்படங்கள்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போட்டியாளர்களில் ஒருவராகிய இசைவாணி திருமணமாகி விவாகரத்தும் ஆகிவிட்டதாக புகைப்படங்களுடன் கூடிய செய்திகள் சமூக வலைதளங்களில் வைரல்

டி20 உலகக்கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் அதிரடி மாற்றம்!

டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி வீரர்கள் குறித்த பட்டியலை ஏற்கனவே பிசிசிஐ அறிவித்துவிட்ட நிலையில் தற்போது

விருந்தில் கலந்துகொண்ட புலியால் அதிரும் சோஷியல் மீடியா!

துபாயில் தங்களுக்குப் பிறக்கப் போகும் குழந்தை ஆணா? பெண்ணா? என உறவினர்களுக்கு அறிவிக்கும் விழாவினை ஒரு தம்பதியினர் ஏற்பாடு செய்திருந்தனர்.