சிவகார்த்திகேயனின் 'வேலைக்காரன்' பர்ஸ்ட் லுக்கிற்கு பிரமாத வரவேற்பு

  • IndiaGlitz, [Monday,June 05 2017]

சிவகார்த்திகேயன், நயன்தாரா நடிப்பில் மோகன் ராஜா இயக்கத்தில் 24ஏஎம் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்து வரும் 'வேலைக்காரன்' படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டது.

கடந்த பிப்ரவரி 17ஆம் தேதி சிவகார்த்திகேயனின் பிறந்த நாளில் இந்த படத்தின் டைட்டிலை வெளியிட்ட படக்குழுவினர் சற்று முன்பு இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளனர். இந்த ஃபர்ஸ்ட்லுக்கில் மெடிக்கல் ரெப் போன்ற தோற்றத்தில் உள்ள சிவகார்த்திகேயன் ஒரு கையில் பேக் மற்றும் இன்னொரு கையில் ரத்தக்கறையுடன் உள்ள அரிவாளும் வைத்துள்ளார்.

ஃபர்ஸ்ட்லுக் வெளியான ஒருசில நிமிடங்களில் டுவிட்டரில் சென்னை அளவில் டிரண்டுக்கு வந்துள்ள இந்த ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் சிவகார்த்திகேயன் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.

சிவகார்த்திகேயன், நயன்தாரா, பகத் பாசில், சினேகா, பிரகாஷ்ராஜ், ரோகினி, ஆர் ஜே பாலாஜி, சதீஷ், ரோபோ ஷங்கர் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு இளம் இசைப்புயல் அனிருத் இசையமைத்து வருகிறார். ராம்ஜி ஒளிப்பதிவும், விவேக் ஹர்சன் படத்தொகுப்பு பணியும் செய்து வரும் இந்த படம் வரும் ஆயுதபூஜை விடுமுறை தினத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

கோலிவுட் திரையுலகில் எண்ட்ரி ஆகும் பிரபல தொலைக்காட்சி நடிகை

பொதுவாக நடிகர்கள் பலர் தொலைக்காட்சியில் இருந்து சினிமாவுக்கு வருவதை பார்த்திருக்கின்றோம். சந்தானம், சிவகார்த்திகேயன் உள்பட பலரை இதற்கு உதாரணமாக கூற முடியும்.

ரஜினி என்னிடம் கடன்பட்டுள்ளார். இசைஞானி இளையராஜா

இசைஞானி இளையராஜாவின் பிறந்த நாள் சமீபத்தில் சென்னை காமராஜர் அரங்கில் ஒரு நாள் முழுவதும் கொண்டாடப்பட்டது என்பதும் இந்த விழாவில் உலக நாயகன் கமல் உள்பட பலர் நேரில் வருகை தந்து இசைஞானிக்கு வாழ்த்து தெரிவித்தார்கள் என்பதும் தெரிந்ததே.

உலக மாமேதை ஜெயக்குமாருக்கு பதில் சொல்லும் தகுதி எனக்கு இல்லை. டிடிவி தினகரன்

அதிமுக அம்மா அணியின் துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் சமீபத்தில் ஜாமீன் பெற்று சென்னை திரும்பினார்.

இந்தியா-பாகிஸ்தான் போட்டி: ஆட்டநாயகர்கள் விருதினை பெற்ற காதல் ஜோடி

ஒவ்வொரு முறையும் இந்தியா-பாகிஸ்தான் போட்டி நடைபெறும்போது இருநாட்டு ரசிகர்களும் போட்டியை போட்டியாக பார்ப்பதில்லை. இரு நாடுகளுக்கும் இடையிலான போர் போலத்தான் பார்ப்பதுண்டு...